11th Tamil Half Yearly Question Paper 2025 with Answer Key | PDF Download Link
Are you searching for the original 11th Tamil Half Yearly Question Paper 2025 with a verified answer key? You've come to the right place. This guide provides the complete exam paper, subject-wise solutions, expert analysis, and a direct PDF download link to help you ace your Tamil half-yearly exams.
📄 Overview of the 11th Tamil Half Yearly Exam 2025 Pattern
The Tamil Nadu State Board 11th Tamil Half Yearly Exam follows a structured format to assess students’ understanding of prose, poetry, grammar, and creative writing.
Key Sections:
- பகுதி அ - இலக்கணம் (Grammar): 25-30 marks
- பகுதி ஆ - உரைநடை & பாடல் (Prose & Poetry): 40-45 marks
- பகுதி இ - கட்டுரை & கடிதம் (Essay & Letter): 25-30 marks
🧠 Expert Tips to Score 80+ in Tamil Half Yearly Exam
- Focus on Grammar (Ilakkanam): 30% of your score depends on clear grammar rules. Practice வாக்கியம், சொல்லுருபு, வினைமுற்று daily.
- Memorize Poetry Lines (Padal): Quote exact lines from poems in your answers for authenticity and extra marks.
- Time Management: Allocate 15 mins for grammar, 45 mins for prose/poetry, and 30 mins for essay/letter writing.
- Use Previous Year Papers: Practicing with the 2024 & 2023 question papers will give you an edge in pattern recognition.
Original Question Paper 2025-26
வகுப்பு : 11 அரையாண்டுத்தேர்வு –
2025
காலம் : 3.00 மணி பொதுத்தமிழ் மொத்த மதிப்பெண்கள் : 90
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக
14×1=14
2. 'மொழிதான் ஒரு
கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது' எனக் கூறியவர்
அ) வால்ட் விட்மன் ஆ) எர்னஸ்ட் காசிரர் இ) ஆற்றூர் ரவிவர்மா ஈ) பாப்லோ நெருடா
3. மொழிக்கு
முதலில் வரும் எழுத்துகள் எத்தனை
அ) 21 ஆ) 22 இ) 23 ஈ) 24
4. 'போது'
என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) போதும் ஆ) காடு இ) மொட்டு ஈ) மேகம்
5. மண்ணுக்கு
வளம் சேர்ப்பன
அ) மண்புழு ஆ) ஊடுபயிர் இ)
இயற்கை உரங்கள் ஈ) இவை மூன்றும்
6. ஐந்து
வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர்
அ) வால்ட் விட்மன் ஆ) பாப்லோ நெரூடா இ) மல்லார்மே ஈ) மசானபு ஃபுகோகா
7. ஒப்புரவு
என்பதன் பொருள்
அ) அடக்கமுடையது ஆ) பண்புடையது இ) ஊருக்கு உதவுவது ஈ) செல்வமுடையது
8. 'சுடச்சுட'
என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) அடுக்குத்தொடர் ஈ) பெயரெச்சம்
9. காவடிச்சிந்தின்
தந்தை என்று அழைக்கப்படுபவர்
அ) பாரதிதாசன் ஆ) அண்ணாமலையார் இ) முருகன் ஈ) பாரதியார்
10. 'முழவோசை'
- இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதியை வரிசைப்படுத்துக.
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடலமேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின்
உக்குறள் மெய்விட்டோடும்
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில்
முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
ஈ) முன் நின்ற மெய் திரிதல், உயிர்வரின் உக்குறள்
மெய்விட்டோடும்
11. "நீளும்
கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில் நெஞ்சம் படரும்" - இஃது யார் கூற்று?
அ) சு.வில்வரத்தினம் ஆ) பாரதி இ) இன்குலாப் ஈ) நடராசன்
12. பின்வருவனவற்றுள்
பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அன் - வந்தனன்
ஆ) கு - காண்குவன்
இ) இன் - முறிந்தது
ஈ) அன் - சென்றன
13. தொழுதவர் -
இலக்கணக்குறிப்புத் தருக.
அ) வினையாலணையும் பெயர் ஆ) வினையெச்சம்
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) பெயரெச்சம்
14. கூற்று: 'கோடு' என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம்: கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண்,
கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.
அ) கூற்று சரி; விளக்கம் தவறு ஆ) கூற்றும் தவறு:
விளக்கமும் தவறு
இ)
கூற்று தவறு; விளக்கம் சரி ஈ) கூற்றும் சரி; விளக்கமும் சரி
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3x2=6
15. "உழுவோர்க் கெல்லாம்
விழுமிய வேந்து நீ" - தொடரின் பொருள் யாது?
16. மதினா நகரம் ஒரு மாளிகை
நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
17. எதற்கு முன் நல்ல செயல்களை
விரைந்து செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது?
18. காவடிச்சிந்து என்பது
யாது?
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2x2=4
19. தமிழ்நாட்டின் மாநில
மரம் - சிறு குறிப்பு வரைக.
20. செந்துறைப்
பாடாண்பாட்டு - துறை விளக்கம் தருக.
21. 'கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7x2=14
22. தோன்றின் புகழொடு தோன்றுக
அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
-
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள தொடை
நயங்களைக் குறிப்பிடுக.
23. ஏதேனும்
ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக.
1) துய்த்தல் 2)
அணிந்தேன்
24. கலைச்சொல் அறிக. 1)
DOCUMENT 2) CLASSICAL LANGUAGE
25. ஏதேனும் ஒன்றனுக்கு
உறுப்பிலக்கணம் தருக.
அ) பெற்றேன் ஆ) மலிந்த
26. சொல்லைப் பிரித்தும்,
சேர்த்தும் தொடரமைக்க.
அ) பிண்ணாக்கு ஆ) பிள்நாக்கு
27. நான் வாரத்தின் இறுதிநாள்களில்
நூலகத்திற்குச் செல்வேன். (பொருள்மாறா எதிர்மறைத்
தொடராக மாற்றுக)
28. பேச்சு வழக்கை எழுத்து
வழக்காக மாற்றுக: முயற்சி
செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.
29. விடுபட்ட இடத்தில் அடுத்து
வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
1) எழுத்து, சொல், _____ யாப்பு,
______.
2) எழுத்து, ___ சீர், தளை, _____,
தொடை.
30. புதிர்களுக்கான
விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (கம்பு, மை, வளை, மதி, இதழ், கூழ்)
அ) சிலம்பம் சுற்றலாம்: கோடைக்குக் கூழாகவும் குடிக்கலாம்
ஆ) அறிவின் பெயரும் அதுதான்: அம்புலியின் பெயரும் அதுவேதான்
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
31. சு. வில்வரத்தினம் 'பாடத்தான் வேண்டும்' என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
32. குறித்த காலத்திற்கு
முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக
33. "கலைவலார் மறையவர்
கருத்தில் எண்ணியது" - யாது?
34. உருவக அணியைச் சான்றுடன்
விளக்குக.
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2×4=8
35. கவிதை ஒரு படைப்புச்
செயல்பாடு என்பதை விளக்குக.
36. சமணப்பள்ளிகளும்,
பெண் கல்வியும் - குறிப்பு வரைக.
37. ஐந்து வேளாண் மந்திரங்கள்
யாவை?
38. கல்வியால் நீ அடைந்த
சிறப்புகளைப் பத்து வரிகளில் எடுத்துரைக்க.
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12
39.
(அ) வேற்றுமை அணியைச் சான்று தந்து விளக்குக. (அல்லது)
(ஆ) வினைவலியும்
தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியைச் சுட்டி விளக்குக.
40.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து” - இக்குறட்பாவில்
பயின்றுவரும் அணியை விளக்குக.
41.
தமிழாக்கம் தருக.
1. Education is the most powerful weapon, which you
can use to change the world.
2. Looking at beauty in the world is the first step
of purifying the mind.
3. Culture does not make people, people make culture.
4. A
nation's culture resides in the hearts and in the soul of its people.
42. "சேரநாடு செல்வ
வளம் மிக்கது" என்ற கூற்றிற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.
43. "கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணியது" - யாது?
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 3×6=18
44.
(அ) கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை
ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.
(அல்லது)
(ஆ) புல், நாங்கூழ்ப்
புழுவை நோக்கி நடராசன் உரைப்பனவற்றைத் தொகுத்து எழுதுக.
45.
(அ) மதினா நகரம் ஒரு வளமான நகரம் என உமறுப்புலவர்
வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
(ஆ) "தாம்
வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர்
ஆனந்தரங்கர்"
என்பதை நிறுவுக.
46.
அ) சிம்மொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய
பணிகளை நும்
பாடப்பகுதி கொண்டு
தொகுத்தெழுதுக.
(அல்லது)
ஆ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப்
பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர்
அறிந்தவற்றைத்
தொகுத்து எழுதுக.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 4+2=6
47.
(அ) 'உடையணிந்தேன்" - எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(ஆ) 'பொருட்டு' என் முடியும் குறளை எழுதுக.
