12th Tamil Half Yearly 2025 Answer Key | PDF Download Link
Are you searching for the original 12th Tamil Half Yearly Question Paper 2025 with a verified answer key? You've come to the right place. This guide provides the complete exam paper, subject-wise solutions, expert analysis, and a direct PDF download link to help you ace your Tamil half-yearly exams.
📄 Overview of the 12th Tamil Half Yearly Exam 2025 Pattern
The Tamil Nadu State Board 12th Tamil Half Yearly Exam follows a structured format to assess students’ understanding of prose, poetry, grammar, and creative writing.
Key Sections:
- பகுதி அ - இலக்கணம் (Grammar): 25-30 marks
- பகுதி ஆ - உரைநடை & பாடல் (Prose & Poetry): 40-45 marks
- பகுதி இ - கட்டுரை & கடிதம் (Essay & Letter): 25-30 marks
🧠 Expert Tips to Score 80+ in Tamil Half Yearly Exam
- Focus on Grammar (Ilakkanam): 30% of your score depends on clear grammar rules. Practice வாக்கியம், சொல்லுருபு, வினைமுற்று daily.
- Memorize Poetry Lines (Padal): Quote exact lines from poems in your answers for authenticity and extra marks.
- Time Management: Allocate 15 mins for grammar, 45 mins for prose/poetry, and 30 mins for essay/letter writing.
- Use Previous Year Papers: Practicing with the 2024 & 2023 question papers will give you an edge in pattern recognition.
வகுப்பு : 12 அரையாண்டுத்தேர்வு – 2025
காலம் : 3.00 மணி பொதுத்தமிழ் மொத்த மதிப்பெண்கள் :90
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 14x1=14
1.
"நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று
அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது -
(அ) சூரிய ஒளிக்கதிர் (இ) மழை மேகங்கள் (ஆ) மழைத்துளிகள். (ஈ) நீர்நிலைகள்
2.
'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில்
இடம்பெற்றுள்ள நூல்
(அ) புறநானூறு (ஆ) தொல்காப்பியம் (இ) திருக்குறள் (ஈ) குறுந்தொகை
3.
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
(அ) செய்யாமல் செய்த உதவி (ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
(இ) தினைத்துணை நன்றி (ஈ) காலத்தினால் செய்த நன்றி
4.
"இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக"
என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
(அ) அவமானம் (ஆ) வக்கிரம் (இ) வஞ்சனை (ஈ) இவை மூன்றும்
5.
"செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள
கவிதைத் தொகுப்பு
(அ) சர்ப்பயாகம் (ஆ) சூரியநிழல் (இ) நிலவுப்பூ (ஈ) ஒளிப்பறவை
6.
சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது
நம்பிக்கை மையம் - காரணம்
(அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
(ஆ) மென்பொருள், வன்பொருள்,
வாகன உற்பத்தியில் பங்கு
(இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
(ஈ) அ, ஆ, இ – அனைத்தும்
7.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
(அ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. (ஆ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத்
தெரியும்.
(இ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன. (ஈ) வறட்சி எல்லா இடங்களையும்
பாதித்துள்ளது.
8.
தடக்கையான் - இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு
(அ) உரிச்சொல்தொடர் (ஆ) வினைத்தொகை
(இ) உம்மைத்தொகை (ஈ) இடைச்சொல் தொடர்
9.
தமிழில் பாகுபாடு பொருட்குறிப்பு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
(அ) பால் (ஆ) திணை (இ) இடம் (ஈ) எண்
10.
நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
(அ) 2004 (ஆ) 2006 (இ) 2012 (ஈ) 2014
11.
"வாளால் அறுத்துச் சுடினும்..." இவ் வடியின் மூலம்
குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது --
அ) போர், ஆ) மருத்துவம், இ) விளையாட்டு, ஈ) வேளாண்மை
12.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு, ஆ) மணத்தக்காளி இலைச் சாறு, இ) கடுக்காய், ஈ) மாவிலைக்கரி
13.
'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும்
நிலைக்கலன்களுள் ஒன்று----
அ) கொடை, ஆ)
பிணி, இ) பேதைமை, ஈ) செல்வம்
14.
'சாய்வு நாற்காலி'என்னும் புதினத்தை
எழுதியவர்----
அ) கவிக்கோ அப்துல் ரகுமான், ஆ) கவிப்பேரரசு வைரமுத்து,
இ) தோப்பில் முகமது மீரான், ஈ) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3x2=6
15. 'நகரம் பட்டை
தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
16. எதிர்பாராத நிகழ்வுகளாக
ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
17. சிலப்பதிகாரத்திற்கு
வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
18. அக்காலத்துக் கல்விமுறையில்
மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2x2=4
19. 'மருட்கை'
என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
20. புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக.
21. "தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள்"- குறிப்பு வரைக.
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. 7x2=14
22. கலைச் சொல்லாக்கம் தருக.
அ) ARCHIVE, ஆ) CULTURE
23. ஏதேனும் ஒன்றனுக்குப்
புணர்ச்சி விதி தருக : அ) செம்பரிதி ஆ) இனநிரை
24. ஏதேனும் ஒன்றனுக்குப்
பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) பேசுவார்
ஆ) தொழுதனர்
25. அவாழைக்காட்டில் குயில்கள்
அலறிக் கொண்டும் காகங்கள் கூவிக் கொண்டும் இருந்தன.
(மரபுப் பிழைகளை நீக்குக)
26. பின்வரும் மயங்கொலிச்
சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) தலை, தளை,
தழை (அல்லது) ஆ) கலை, களை, கழை
27. வல்லின மெய்களை இட்டும்
நீக்கியும் எழுதுக.
ஆசிரியருக்கு
கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு
அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை
கற்றுக் கொடுக்கும்.
28. சொற்களைக் கொண்டு தொடர்
எழுதுக:
அ) குதிரை, வேகம், ஓடு, தாவு (அல்லது), ஆ) திரை,
காண், கைத்தட்டல், மக்கள்
29. கீழ்க்காணும் நான்கு
சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக. குதிரை, வேகம், ஓடு, தாவு.
30. உவமைத் தொடரைச் சொற்றொடரில்
அமைத்து எழுதுக: எலியும்
பூனையும்போல
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2x4=8
31.
"கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
குளிர்பொதிகைத் தென்தமிழே!
சீறி வா, வா!" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32.
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம்
வான மெல்லாம்"
- தொடர் வெளிப்படுத்தும் காட்சி
நயத்தை விளக்குக.
33.
"மாளாத காதல் நோயாளன் போல்" என்னும்
தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
34.
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2x4=8
35. நீங்கள் ஆசிரியரானால்
மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
36. மனத்திட்பம் அவசியமான
பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
37. மயிலை சீனி வேங்கடசாமியின்
வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
38. மணந்தகம் – விளக்குக
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3x4=12
39.
அ) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
- இக்குறட்பாவில்
பயின்று வரும் அணியை விளக்குக.
(அல்லது)
ஆ) கீழ்க்காணும்
குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
“சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புனையைச் சுடும்"
40.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிக்க.
(தமிழ்ஒளி,
அம்பை, கோதை, கவிமணி,
மறைமலை அடிகள்)
1. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்
2. கவிஞர்; ஈற்றிரு
சொல்லால் அணிகலன் செய்யலாம்
3. தாய்மொழி; ஈற்றிரு
எழுத்துகள் வெளிச்சம் தரும்
4. தமிழறிஞர்; முதலிரு
எழுத்துகளால் மறைக்கலாம்.
41.
கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு
ஏற்றவாறு மாற்றி
எழுதுக.
அ) நேற்று முதல்---(அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆ) உங்களுக்கு...--(யார்) நன்மை என நினைக்கின்றீர்.
இ) முருகன்-----(வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
ஈ) நம்முடைய----(தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
42.
திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
43.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
(அ) கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை (அல்லது) (ஆ) ஆனைக்கும் அடிசறுக்கும்
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3x6=18
44.
(அ) நாட்டிய அரங்கின் அமைப்பைச் சிலப்பதிகாரத்தின்வழி
விளக்கி எழுதுக.
(அல்லது)
(ஆ) 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை' எனும் சிறுகதை உணர்த்தும்
கருத்துகளைச் சுவை குன்றாமல்
சுருக்கி வரைக.
45.
அ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம்
--நிறுவுக.
(அல்லது)
ஆ) சென்னையில்
உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம்
காட்சிப்படுத்தப்படுகின்றன?
46.
(அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
- இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை
விளக்குக.
(அல்லது)
(ஆ) ஏகதேச
உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 4+2=6
47.
(அ) “ஒருமையுடன்...." - எனத்தொடங்கும் தெய்வமணிமாலைப் பாடலை எழுதுக.
(ஆ) "படும்" என முடியும் குறளை எழுதுக.
