9th Tamil Half Yearly Question Paper 2025 with Answer Key | PDF Download Link
Are you searching for the original 9th Tamil Half Yearly Question Paper 2025 with a verified answer key? You've come to the right place. This guide provides the complete exam paper, subject-wise solutions, expert analysis, and a direct PDF download link to help you ace your Tamil half-yearly exams.
📄 Overview of the 9th Tamil Half Yearly Exam 2025 Pattern
The Tamil Nadu State Board 9th Tamil Half Yearly Exam follows a structured format to assess students’ understanding of prose, poetry, grammar, and creative writing.
Key Sections:
- பகுதி அ - இலக்கணம் (Grammar): 25-30 marks
- பகுதி ஆ - உரைநடை & பாடல் (Prose & Poetry): 40-45 marks
- பகுதி இ - கட்டுரை & கடிதம் (Essay & Letter): 25-30 marks
🧠 Expert Tips to Score 90+ in Tamil Half Yearly Exam
- Focus on Grammar (Ilakkanam): 30% of your score depends on clear grammar rules. Practice வாக்கியம், சொல்லுருபு, வினைமுற்று daily.
- Memorize Poetry Lines (Padal): Quote exact lines from poems in your answers for authenticity and extra marks.
- Time Management: Allocate 15 mins for grammar, 45 mins for prose/poetry, and 30 mins for essay/letter writing.
- Use Previous Year Papers: Practicing with the 2024 & 2023 question papers will give you an edge in pattern recognition.
Original Question Paper 2025-26
9.
ஆம் வகுப்பு அரையாண்டுத்தேர்வு மாதிரி
வினாத்தாள் (2025-2026)
நேரம் : 3.00 மணி
தமிழ் மொத்த மதிப்பெண்கள்: 100
பகுதி-1
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1-15
1.
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) இலஞ்சி இ)
புலரி ஈ) ஆறு
2.
தமிழ்விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தனிப்பாடல் ஆ) சிற்றிலக்கியம் இ) தொடர்நிலைச் செய்யுள் ஈ) புதுக்கவிதை
3.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - என்று
கூறியவர் யார்?
அ) ஈரோடு தமிழன்பன் ஆ) பாரதிதாசன் இ) கால்டுவெல் ஈ) பாரதியார்
4.
சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆ) வேற்றுமைத்தொகை
இ) வினைத்தொகை ஈ) பண்புத்தொகை
5.
பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
அ) அண்ணா அ என அழைத்தான் ஆ)
ஓடி வா ஓடி வா
இ) குக்கூ எனக் குயில் கூவியது ஈ) கொக்கொரக்கோ என சேவல் கூவியது
6.
கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் இ) உவர்நிலம் ஆ) களர்நிலம் ஈ) புஞ்சை நிலம்
7.
'இரு' என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது. இ) எங்கே இருக்கிறது.
ஆ) பட்டம் செய்திருக்கிறேன். ஈ) வானில் மேகம் இருக்கிறது.
8.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
i. வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்
ii. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
முத்துலெட்சுமி
அ) 1 மட்டும் சரி இ) 1, 2 இரண்டும் தவறு ஆ) 1, 2 இரண்டும் சரி ஈ) 2 மட்டும் சரி
9.
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று
அ) மாமல்லபுரம் இ) திரிபுவன வீரேசுவரம் ஆ) பிள்ளை யார்ப்பட்டி ஈ) திருக்க்கொடியூர்
10.
'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி
அ) குறிஞ்சி இ) முல்லை ஆ) நெய்தல் ஈ)
பாலை
11.
திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை.
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
12.
தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ. குணம், குற்றம் இ. பெருமை,
சிறுமை ஈ. நாடாமை, பேணாமை
II.
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளி.
காலம்
பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும்
தமிழே!
எத்தனை எத்தனை சமயங்கள் -
தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் -
புதுச்
சிந்தனை வீச்சுகள்
பாய்ந்தனவே...
13.
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
அ) தமிழ்விடுதூது ஆ) புறநானூறு இ) தமிழோவியம் ஈ) பெரியபுராணம்
14.
எத்தனை எத்தனை - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) பண்புத்தொகை ஆ) அடுக்குத்தொடர் இ) வினையெச்சம் ஈ) உருவகம்
15.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்கள்
அ) காலமும் : நிலையாய் ஆ) காலமும் பிறக்கும் முன் இ) சிந்தனை வீச்சுகள் ஈ)
சித்தர் சிந்தனை
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா) 4X2=8
16)
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) இடைச்சொற்களே
மொழிப்பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
ஆ) தமிழர் வரலாறு பண்பாட்டுத்
தொன்மை வாய்ந்தது.
17)
ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக்
குறிப்பிடுக
18)
சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
19)
"கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ" இடஞ்சுட்டிப் பொருள் தருக.
20)
பழமணல் மாற்றுமின்:புதுமணல் பரப்புமின் -இடஞ்சுட்டிப் பொருள்
விளக்கம் தருக.
21)
'உடைத்து' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: 5X2=10
22)
வல்லினம் மிகும் இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.
23)
அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
24)
பொருள் எழுதித் தொடர் அமைக்க: புல்-புள்
25)
மரபு இணைச் சொற்களைத் தொடரில்அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும் 2. நகமும் சதையும்
26)
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
எண்ணெய் ஊற்றி-விளக்கு
ஏற்றியவுடன், இடத்தை விட்டு-----
27)
உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
கயல் விழி உணவு சமைத்தாள் :
உண்டவர் அமுது போன்ற சுவையில் நீந்தினர்.
28)
அகராதியில்காண்க. அ. இயவை, ஆ. சந்தப்பேழை
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: 2X3-6
29)
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு
இடம்பெற்றுள்ளது?
30)
ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம்
பிணைந்திருந்தது?
31)
பத்தியைப் படித்துப் பதில் தருக: -
தமிழர், போரிலும்
அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர்,
புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர்
செய்யாமையைக் குறிக்கிறது.போரின்
கொடுமையிலிருந்து பசு,
பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,
புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்
தீங்கு வராமல் போர் புரிய
வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு
போர் செய்வது கூடாது என்பதை
ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ. போர் அறம் என்பது எவற்றைக்
குறிக்கிறது?
ஆ. ஆவூர் மூலங்கிழார் போர்
அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?
இ. போரில் யாருக்கெல்லாம்
தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன?
பிரிவு-2
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
2X3=6
32)
வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி
எழுதுக.
33)
திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக
34)
அ. ஒன்றறிவதுவே- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக (அல்லது)
ஆ. தித்திக்கும் - எனத்
தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக
பிரிவு-3
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: 2X3=6
35)
அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக
36)
எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம்
மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக
37)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
இக்குறட்பாவில்
பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி-4 (மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38)
அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகளைத் தொகுத்து
எழுதுக.
(அல்லது)
ஆ) இன்றைய வாழ்வியலுக்கு கேள்வியறிவு
அவசியம் என்பதை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
39)
அ. சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில்
மாவட்டத்திலேயே சிறந்ததாக
உங்கள் பள்ளி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும்
மாவட்டக்கல்வி
அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
(அல்லது)
ஆ. உங்களின் நண்பர்,
பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின்,
"கால்முளைத்த
கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
40)
அ) நீங்கள் செய்த நற்செயல்களால் பாராட்டுப்பெற்ற சூழல்கள் ஐந்தனைஒ
எழுதுக. (அல்லது)
ஆ) பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation's
culture resides in the hearts and in the soul of its people Mahatma Gandhi
2. The art of
people is a true mirror to their minds Jawaharlal Nehru
3. The biggest
problem is the lack of love and charity Mother Teresa
4. You have to
dream before your dreams can come true A.P.J. Abdul Kalam
5. Winners don't do different things: they do things
differently - Shiv Khera
41)
12, வள்ளுவர் தெரு, எழிநகர், திருத்தணி-1 என்ற முகவரியில் வசித்துவரும்
பிறைநிலவனின்
மகன் எழில்குமரன்
அப்பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். அவர்
தன்னுடைய கணக்கிலிருந்து
ரூபாய் 2000 ஐ எடுக்க விரும்புகிறார். அவருக்கு உரிய
படிவத்தை நிரப்பி
உதவுக,
42)
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43)
அ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான
காரணங்களை விவரிக்க.
(அல்லது)
ஆ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள்
கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை
நிறுவுக
44)
அ) இசைக்கு நாடு, மொழி, இனம்
தேவையில்லை என்பதைச் 'செய்தி' கதையின்
மூலமாக
விளக்குக.
(அல்லது)
ஆ) தண்ணீர் கதையைக்
கருப்பொருள் குன்றாமல் சுருக்கி எழுதுக.
45)
அ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத்
திரட்டி தொகுப்புரை எழுதுக.
(அல்லது)
ஆ. "உழவே உன்னதம்" என்ற தலைப்பில் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக முன்னுரை - உழவே தமிழர் மகுடம்-உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் - சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - முடிவுரை.
