10th Tamil First Revision 2026 key: Official and pdf download

 10th Tamil First Revision 2026: Official answer key | Sivagangai




பள்ளிக்கல்வித்துறை சிவகங்கை மாவட்டம்

பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 2025 தமிழ் - விடைக்குறிப்பு


பகுதி 1 (மதிப்பெண்கள் 15)

ஒரு மதிப்பெண் வினாக்கள்:

  1. ஈ) சருகும் சண்டும்

  2. இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

  3. ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்

  4. ஈ) 3, 1, 4, 2

  5. அ) வேற்றுமை உருபு

  6. இ) பண்புத்தொகை

  7. ஆ) வினையெச்சத்தொடர்

  8. ஆ) இன்மையிலும் விருந்து

  9. ஈ) மன்னன், இறைவன்

  10. இ) திணை வழுவமைதி

  11. இ) எம்+தமிழ் +நா

  12. ஆ) குமரகுருபரர்

  13. ஈ) செங்கீரை

  14. அ) எண்ணும்மை

  15. இ) காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது


இரண்டு மதிப்பெண் வினாக்கள் (பகுதி 2)

16.

  • அ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

  • ஆ) தமிழ்த்தென்றல் திருவிக, போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

  • (பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

17.

  1. சிலம்பு 2. கிண்கிணி 3. அரைஞாண் 4. சுட்டி 5. குண்டலம் 6. குழை

18.

  • செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை

19.

  • கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

  • மொழி வளம் பெறுகிறது.

  • பிறநாட்டு கலாச்சாரம், பண்பாட்டை அறியமுடிகிறது.

20.

  • சூரியனை மறைக்கும்.

  • தாகம் தீர்க்கும்.

  • மலை உச்சியில் நடக்கும்.

  • வானத்தில் நடக்கும்.

21.

  • "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்"

22. பகுபத உறுப்பிலக்கணம் (அமர்ந்தான்):

  • அமர் + த்(ந்) + த் + ஆன்

  • பகுதி: அமர்

  • சந்தி: த், ந் ஆனது விகாரம்

  • இறந்தகால இடைநிலை: த்

  • படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதி: ஆன்


மூன்று மதிப்பெண் வினாக்கள் (பகுதி 3)

23. (இரு வினாக்களில் ஒன்று)

  • அ) பல்துறை ஊடகம்

  • ஆ) சுழல் காற்று

23. (தொடர் வகைகள் - மாற்று வினா)

  • அ) சிலையை சீலையால் மூடினான்

  • ஆ) விடு நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்

  • (பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)

24.

  • அ) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

25.

  • ஆ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

  • அ) அடுக்குத்தொடர்

  • ஆ) பெயரெச்சத்தொடர்

26 / 27.

  • அ. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • ஆ. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  • அ) இட வழுவமைதி

  • ஆ) கால வழுவமைதி

28.

  • தண்ணீர் குடி -> தண்ணீரைக்குடி (இரண்டாம் வேற்றுமைத்தொகை)

29.

  • நட்டான்

30.

  • காலை எழுந்தவுடன் தண்ணீரைக்குடித்தல் நல்ல பழக்கம்.

  • தயிர்க்குடம் - தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை).

  • கமலா தயிர்க்குடத்தை எடுத்துச்சென்றாள்.

  • வாழைக்கன்றை, பலாக்கன்று நட்டான், மாங்கன்று நட்டான், கத்தரி நாற்று நட்டான், நாற்றை நட்டான்.

  • அ) கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.

  • ஆ) செயற்கை நுண்ணறிவு, படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது.

  • இ) உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

31.

  • விருந்தோம்பலின் அடிப்படை தனித்து உண்ணாமை.

  • அமிர்தம் என்றாலும் தனித்து உண்ணாமை.

  • இக்காலத்தில் அது இல்லை.

  • இன்று கொடுத்து உண்பதும் இல்லை.

32.

  • வானத்தில் கரு தோன்றியது.

  • அப்போது காற்று உருவானது.

  • நெருப்பு பந்து போல பூமி தோன்றியது.

  • மழை பெய்தது.

  • உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் வந்தது.


ஐந்து மதிப்பெண் வினாக்கள் (பகுதி 4)

33.

  • வறுமையிலும் விருந்தளித்தனர்.

  • விதை நெல்லை உணவாக்கி விருந்தளித்தனர்.

  • வாளைப் பணயம் வைத்து விருந்தளித்தனர்.

34.

  • "புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்."

  • "நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா."

  • அல்லது

  • "மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!"

  • "எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை!"

  • "தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!"

  • "கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!"

35.

  • எழுதுபவருக்குப் பரிசு (வினா எண் 34/35 காட்சிக்கு ஏற்ப விடை).

36.

  • "உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!"

    1. பாடிக்காட்டினார் (வினையெச்சத்தொடர்).

    1. கேட்டுப் பாடினர் (வினையெச்சத்தொடர்).

    1. கேட்ட பாடலில் (பெயரெச்சத்தொடர்).

    1. சிறுவினாக்களைக் கேட்டார் (வேற்றுமைத்தொடர்).

அணி விளக்கம் (எடுத்துக்காட்டு உவமையணி):

  • ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம் பெற்று உவமை மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.

  • எடுத்துக்காட்டு: "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்".

  • அணிப்பொருத்தம்:

    • உவமை: பாடலோடு பொருந்தாத இசை.

    • உவமேயம்: இரக்கம் இல்லாத கண்.

    • உவம உருபு: மறைந்து வந்துள்ளது.

37. அலகிடுதல்:

  • அரியவற்றுள் (நிரை நிரை நேர்) - கருவிளங்காய்

  • எல்லாம் (நேர் நேர்) - தேமா

  • அரிதே (நிரை நேர்) - புளிமா

  • பெரியாரைப் (நிரை நேர் நேர்) - புளிமாங்காய்

  • பேணித் (நேர் நேர்) - தேமா

  • தமராக் (நிரை நேர்) - புளிமா

  • கொளல் (நிரை) - மலர் (வாய்பாடு)


எட்டு மதிப்பெண் வினாக்கள் (பகுதி 5)

38.

  • அ) இடைக்காடனார் கதை:

    • இடைக்காடனார் மன்னர் முன் தன் பாடலைப் பாடினார்.

    • மன்னன் புலவனின் பாடலை கேட்கவில்லை.

    • புலவர் மனம் வருந்தினார், இறைவனிடம் முறையிட்டார்.

    • இறைவன் கடம்பவனத்தை விட்டுச்சென்றார்.

    • மன்னன் இறைவனிடம் வேண்டினார்.

    • இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தார்.

    • இறைவன் மீண்டும் கடம்பவனம் வந்தார்.

  • ஆ) காலக்கணிதம் (நயம் பாராட்டுதல்):

    • திரண்ட கருத்து: கவிஞனாகிய நான் ஓர் காலக்கணிதம் பொருள் நிறைந்த பாடல்களைப் படைப்பேன்.

    • மோனை நயம்: முதலெழுத்துகள் ஒன்றி வருவது மோனைநயம் ஆகும் (எ.கா: கவிஞன் - காலக்கணிதம், கருப்படு - பொருள).

    • எதுகை நயம்: இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை நயமாகும்.

    • முரண்தொடை: எதிர் எதிரான சொற்கள் வருவதால் இப்பாடல் முரண்தொடையில் அமைந்துள்ளது (எ.கா: சரி x தவறு, ஆக்கல் x அழித்தல்).

    • அணி நயம்: கவிஞர் இப்பாடலை உயர்வுபடப் பாடியமையால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

    • பொருள் நயம்: கவிஞர் இப்பாடலைப் பொருள் நயம் தோன்றப் பாடியுள்ளார்.

39.

  • அ) இடம், நாள், விளித்தல், கடிதம், இப்படிக்கு, உறைமேல்முகவரி.

  • அல்லது

  • ஆ) அனுப்புநர், பெறுநர், விளித்தல், பொருள், கடிதப்பொருள், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி.

40.

  • பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

41.

  • பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

42.

  • அ) பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

  • அல்லது

  • ஆ) "மதிப்பிற்குரிய பெண்களே ஆண்களே நான் தான் இளங்கோவன். பத்தாம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் தமிழ் கலாச்சாரத்தைப்பற்றி சில வார்த்தைகளைக் கூற இங்கு வந்துள்ளேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் சிறந்தவர்களாக இருந்தனர் என்று சங்க இலக்கியம் காட்டுகிறது."

  • "மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுதும் வாழும் தமிழர்களில் வாழ்க்கை முறையில் தமிழ் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. நமது கலாச்சாரத்தை எண்ணி நாம் பெருமையடைய வேண்டும். நன்றி."

43.

  • அ) காற்று மாசு (கட்டுரை):

    • முன்னுரை: காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளைக் காண்போம்.

    • தடுக்கும் முறைகள்: மரங்களை வெட்டக்கூடாது, மரங்களை வளர்க்க வேண்டும், குப்பை போடக்கூடாது, வண்டிகளை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது, விறகைப் பயன்படுத்தக் கூடாது, குப்பை எரிக்கக் கூடாது, குளிர் சாதனம் பயன்படுத்தக் கூடாது, புகை வடிகட்டிகளை வைக்க வேண்டும்.

    • முடிவுரை: காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டோம்.

  • அல்லது

  • ஆ) விருந்து உபசரிப்பு (கட்டுரை):

    • வரவேற்பு: எங்கள் இல்லத்திற்கு மாமா குடும்பத்தினர் வருகை புரிந்தனர். மாமா குடும்பத்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்றோம்.

    • உபசரிப்பு: அம்மா இன்முகத்துடன் வரவேற்றார். தேநீர் எடுத்து வந்து என் அம்மா கொடுத்தார்.

    • மாமா குடும்பத்தினர் தங்குவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

    • விருந்து உபசரிப்பு: விதவிதமான சாப்பாடு, அறுசுவை உணவு, சைவமும் அசைவமும் என உணவாக என் அம்மா சமைத்திருந்தார்.

    • வாழை இலையில் பரிமாறப்பட்டது. மகிழ்வுடன் உண்டனர்.

    • பிற்பகல் விருந்தினரின் மனம் உவகையில் நிறைந்ததால் நாங்களும் பெருமகிழ்ச்சி கொண்டோம்.

    • முடிவுரை: விருந்து உபசரிப்பில் நானும் என் தங்கையும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

44.

  • கருப்பொருள் மாறாமல் எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

45.

  • குறிப்புச்சட்டகம் - முன்னுரை - உபதலைப்புகள் - முடிவுரை ஆகியவற்றுடன் பொருத்தமாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

Download the PDF 👈 Click here