10th Tamil Half Yearly 2025 important one words

  10th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF


10th std Tamil | Questions 1 to 15 | Half-yearly Revision 2025 - 2026

SET - 1

1. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

  • அ) கருமை      
  • ஆ) பச்சை       
  • இ) பழுப்பு       
  • ஈ) நீலம் 

2. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

  • அ) கூற்று 1 சரி 2 தவறு           
  • ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
  • இ) கூற்று 1 தவறு 2 சரி           
  • ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

3. சித்திரை, வைகாசி மாதங்களை காலம் என்பர்.

  • அ) முதுவேனில்          
  • ஆ) பின்பனி               
  • இ) முன்பனி               
  • ஈ) இளவேனில் 

4. சு. கந்தசாமியின் அனைத்துலக விருது பெற்ற குறும்படம்

  • அ) பொன்விலங்கு     
  • ஆ) புதுவசந்தம்          
  • இ) சுடுமண் சிலைகள்           
  • ஈ) வசந்தமாளிகை 

5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

  • அ) திருக்குறள்            
  • ஆ) புறநானூறு          
  • இ) கம்பராமாயணம்             
  • ஈ) சிலப்பதிகாரம் 

6. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,:             

  • அ) பாண்டிய நாடு, சேர நாடு               
  • ஆ) சோழ நாடு, சேர நாடு
  • இ) சேர நாடு, சோழ நாடு                     
  • ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு 

7. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ

  • அ) வெட்சி       
  • ஆ) கரந்தை                
  • இ) வஞ்சி                   
  • ஈ) காஞ்சி

8. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:

  • அ) உழவு, மண், ஏர், மாடு                     
  • ஆ) மண், மாடு, ஏர், உழவு
  • இ) உழவு, ஏர், மண், மாடு                     
  • ஈ) ஏர், உழவு, மாடு, மண்

9. 'அன்னை மொழியே' கவிதை இடம்பெறும் நூல் .......

  • அ) நூறாசிரியம்         
  • ஆ) கனிச்சாறு            
  • இ) எண்சுவை            
  • ஈ) பாவியக்கொத்து

10. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ........ ஆகியவற்றைக் குறிப்பது

  • அ) குலைப்பெயர் வகை                    
  • ஆ) மணிப்பெயர் வகை
  • இ) இளைப்பெயர் வகை                    
  • ஈ) இலைப்பெயர் வகை

11. மகிழ்ந்து வருமா? என்பது -

  • அ) விளித்தொடர்     
  • ஆ) எழுவாய்த்தொடர்     
  • இ) வினையெச்சத்தொடர்    
  • ஈ) பெயரெச்சத்தொடர்

12. 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலை எழுதியவர்

  • அ) பிரபஞ்சன்            
  • ஆ) கண்ணதாசன்                 
  • இ) சிங்காரம்               
  • ஈ) நாகூர் ரூமி

13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது             

  • அ) வேற்றுமை உருபு       
  • ஆ) எழுவாய்      
  • இ) உவம உருபு      
  • ஈ) உரிச்சொல்

14. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

  • அ) எந் + தமிழ் + நா                             
  • ஆ) எந்த தமிழ் + நா
  • இ) எம் + தமிழ் + நா                             
  • ஈ) எந்தம் + தமிழ் + நா

15. காய்ந்த இலையும் காந்த தோகையும் குறிப்பன

  • அ) இலையும் சருகும்      
  • ஆ) தோகையும் சண்டும்      
  • இ) தாளும் ஒலையும்      
  • ஈ) சருகும் சண்டும் 

16. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

  • அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது               
  • ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
  • இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்               
  • ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால் 

17. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

  • அ) திருக்குறள்           
  • ஆ) கம்பராமாயணம்           
  • இ) கலித்தொகை          
  • ஈ) சிலப்பதிகாரம்

18. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்...... இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்

  • அ) அமைச்சர், மன்னன்                     
  • ஆ) அமைச்சர், இறைவன்
  • இ) இறைவன், மன்னன்                     
  • ஈ) மன்னன், இறைவன்

 19. மேகங்கள் மிகவும் கருணையானவை தாகங்கள் தீர்க்கும் போது - என்று பாடியவர்

  • அ) நாகூர் ரூமி           
  • ஆ) சீவலமாறன்         
  • இ) குமரகுருபரர்         
  • ஈ) கீரந்தையார்

20. இரவீந்திரநாத் தாகூர் மொழியில் மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான  கீதாஞ்சலியை                மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

  • அ) ஆங்கில, வங்காள                        
  • ஆ) வங்காள, ஆங்கில           
  • இ) வங்காள, தெலுங்கு                     
  • ஈ) தெலுங்கு, ஆங்கில 

21. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?      

  • அ) யாம்           
  • ஆ) நீவிர்         
  • இ) அவர்             
  • ஈ) நாம்

22. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

  • . வானத்தையும் பாட்டையும்                      
  • ஆ வான்வெளியில், பேரொலியில்
  • இ. வானத்தில், பூமியையும்                           
  • ) வானத்தையும், பேரொலியையும்

 

23. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

  • அ) பாடிய, கேட்டவர்    
  • ஆ) பாடல், பாடிய        
  • இ) கேட்டவர், பாடிய    
  • ஈ) பாடல், கேட்டவர் 

24. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

  • அ) கொண்டல் - 1) மேற்கு               ) 1, 2, 3, 4
  • ஆ) கோடை      - 2) தெற்கு             ஆ) 3, 1, 4, 2
  • இ) வாடை        - 3) கிழக்கு              இ) 4, 3, 2, 1
  • ஈ) தென்றல்    - 4) வடக்கு              ஈ) 3, 4, 1, 2

25. 'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்

  • ) புறநானூறு          
  • ) அகநானூறு         
  • ) சிலப்பதிகாரம்                   
  • ) மணிமேகலை

26. ஊழ் ஊழ் என்பது

  • ) உரிச்சொல் தொடர்     
  • ) இடைச்சொல் தொடர்     
  • ) இரட்டைக்கிளவி             
  • ) அடுக்குத்தொடர்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

  •    கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
  •    கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
  •    வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
  •    ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

 

27. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்

  1. அ) கனிச்சாறு             
  2. ஆ) காசிக்காண்டம்    
  3. இ) பரிபாடல்      
  4. ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

28. இப்பாடலின் ஆசிரியர்      

  • அ) பாவலரேறு      
  •  ஆ) சீவலமாறன்     
  • இ) குமரகுருபரர்     
  • ஈ) கீரந்தையார் 

29. குண்டலமும் குழைகாதும் இலக்கணக்குறிப்பு

  • அ) உம்மைத்தொகை             
  • ஆ) எண்ணும்மை      
  • ) பண்புத்தொகை              
  • ஈ) விளித்தொடர்

30.  குகன் என்பது யாரைக் குறிக்கும்?      

  •   அ) குழந்தை       
  • ஆ) முருகன்            
  •   இ) ஆசிரியர்            
  • ) பக்தர்

Click here to preview these questions as PDF

Click here to download these questions as PDF