Special TET 2026 Paper II Psychology Unit 3: 75 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)
Special TET 2026 Paper II Psychology Unit 3: 75 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)
Are you preparing for Special TET 2026 Paper II? Then mastering Psychology Unit 3 is essential. This unit covers the nature, methods, branches, and significance of Educational Psychology – and it's a high-scoring area.
In this blog post, we provide 75 very important and most expected questions with four options and answers – all based on the latest TET syllabus and previous exam patterns.
Let's dive in.
📖 Unit 3 Topics Covered (As per Syllabus)
Definition of Psychology and Educational Psychology
Methods of Psychology (Introspection, Observation, etc.)
Branches of Psychology
Nature and Scope of Educational Psychology
Significance of Educational Psychology to the Teacher
✅ 75 Most Expected Questions & Answers
Special TET 2026 | Paper II | Psychology | Unit 3
அறிவு
திறன் வளர்ச்சி (COGNITIVE
DEVELOPMENT)
Definition of Psychology – Methods of
Psychology – Branches of Psychology – Educational Psychology – Definition,
Nature and Scope of Educational Psychology: The Learner, Learning Process,
Learning Experience, Learning environment, Teacher and teaching – Significance
of Educational Psychology to the teacher.
Most expected 75 Questions in Special TET 2026 | Paper II |
Psychology | Unit 3
1. கவன வீச்சு என்றால் என்ன?
அ) ஒரு மணி நேரத்தில் கவனிக்கும் பொருட்களின் எண்ணிக்கை
ஆ) ஒரே பார்வையில், மிகக் குறுகிய
நேரத்தில் உணரும் தூண்டல்களின் எண்ணிக்கை
இ) ஒரு நாளில் நினைவில் வைத்துக் கொள்ளும் தகவல்கள்
ஈ) கேட்டல் மூலம் பெறும் தூண்டல்கள்
விடை: ஆ
2. கவன வீச்சறி கருவியை முதன்முதலில் உருவாக்கியவர்
யார்?
அ) ஸ்கின்னர்
ஆ) பியாஜே
இ) கெடல்
ஈ) பிராப்பெண்ட்
விடை: இ
3. முதிர்ச்சியடைந்த ஒருவனின் காட்சிக் கவன வீச்சு
பொதுவாக எத்தனை?
அ) 2 அல்லது 3
ஆ) 4 அல்லது 5
இ) 6 அல்லது 7
ஈ) 10 அல்லது 12
விடை: இ
4. கவன மாற்றம் (Shifting of attention) பற்றிய சரியான கூற்று எது?
அ) கவனம் ஒரு தூண்டலில் நிலையாக இருக்கும்
ஆ) கவனம் ஒரு தூண்டலிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச்
செல்லும்
இ) கவனம் ஒருபோதும் மாறாது
ஈ) கவனம் எப்போதும் பல தூண்டல்களிலும் சமமாகப் பரவும்
விடை: ஆ
5. "கவனம் கடல் அலைகள் போல் அதிகரித்தும்,
குறைத்தும் ஒரு பொருளின் பால் செயற்படுகிறது" என்பது எதனை
விளக்குகிறது?
அ) கவன வீச்சு
ஆ) கவன மாற்றம்
இ) கவனப் பதப்பு
ஈ) கவனமின்மை
விடை: ஆ
6. புத்தகத் திரிபுக் காட்சி எதனை
எடுத்துக்காட்டுகிறது?
அ) கவன வீச்சு
ஆ) கவனத்தின் ஊசலாடும் பண்பு
இ) கவனப் பதப்பு
ஈ) புலன் உணர்வு
விடை: ஆ
7. ஒரே சமயத்தில் இரு செயல்களைக் கவனத்துடன் செய்ய
முடியாது என்று கூறுவது எதனைக் குறிக்கிறது?
அ) கவன வீச்சு
ஆ) கவன மாற்றம்
இ) கவனப் பதப்பு
ஈ) கவனமின்மை
விடை: இ
8. ஒரு பெண் கம்பளிச் சட்டை பின்னிக் கொண்டே பிறருடன்
உரையாடுவது எதன் எடுத்துக்காட்டு?
அ) கவன வீச்சு
ஆ) கவன மாற்றம்
இ) கவனப் பதப்பு
ஈ) பழக்கத்தின் காரணமான கவனமில்லாச் செயல்
விடை: ஈ
9. அஷ்டாவதானி, தராவதானி
போன்றோர் எத்தகைய திறன் படைத்தவர்கள்?
அ) நீண்ட நேரம் ஒரே பொருளில் கவனம் செலுத்துதல்
ஆ) வேகமாக மாறி மாறிப் பல செயல்களில் கவனம் செலுத்துதல்
இ) பல பொருட்களை ஒரே நேரத்தில் பார்த்தல்
ஈ) ஒலிகளை மட்டும் கவனித்தல்
விடை: ஆ
10. நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ) புறக்காரணிகள்
ஆ) தூண்டல் காரணிகள்
இ) அகக்காரணிகள்
ஈ) பொருள் காரணிகள்
விடை: இ
11. புறக்காரணிகள் வேறு எப்பெயர்களால்
அழைக்கப்படுகின்றன?
அ) அகக்காரணிகள்
ஆ) தனி நபர் காரணிகள்
இ) பொருள் காரணிகள் / தூண்டல் காரணிகள்
ஈ) உணர்வு காரணிகள்
விடை: இ
12. உரத்த சத்தம், பளிச்சிடும்
ஒளி போன்றவை நம் கவனத்தை எளிதில் ஈர்ப்பது எந்தப் புறக்காரணியின் கீழ் வரும்?
அ) அடர்த்தி
ஆ) மாற்றம்
இ) தூண்டலின் உருவ அளவு
ஈ) இயக்கம்
விடை: இ
13. முழுப் பக்க விளம்பரம், கால்
பக்க விளம்பரத்தை விட அதிக கவனத்தை ஈர்ப்பது எதனால்?
அ) நிறம்
ஆ) அளவு
இ) இயக்கம்
ஈ) செறிவு
விடை: ஆ
14. தீவிரமான மணம், பெருத்த ஒலி
போன்றவை நம் கவனத்தை ஈர்ப்பது எந்தக் காரணியால்?
அ) அளவு
ஆ) மாற்றம்
இ) அடர்த்தி / செறிவு
ஈ) இயக்கம்
விடை: இ
15. அறையில் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறி
நின்றுபோனால் உடனே நம் கவனம் அதன் பால் செல்வது எதனால்?
அ) அளவு
ஆ) மாற்றம்
இ) செறிவு
ஈ) நிறம்
விடை: ஆ
16. வகுப்பறையில் திடீர் அமைதி ஏற்படும் போது மாணவன்
விழித்துக்கொள்வது எதனைக் காட்டுகிறது?
அ) கவன வீச்சு
ஆ) மாற்றம் கவனத்தை ஈர்க்கும்
இ) கவனப் பதப்பு
ஈ) பழக்கம்
விடை: ஆ
17. அகக்காரணிகளுக்கு எடுத்துக்காட்டு எது?
அ) உரத்த ஒலி
ஆ) பளிச்சிடும் ஒளி
இ) ஆர்வம்
ஈ) பெரிய அளவு
விடை: இ
18. கவனமின்மை (Inattention) என்றால்
என்ன?
அ) அனைத்துத் தூண்டல்களையும் கவனித்தல்
ஆ) ஒரு குறிப்பிட்ட தூண்டலைக் கவனிக்காத நிலை
இ) அதிக நேரம் கவனித்தல்
ஈ) பல தூண்டல்களை ஒரே நேரத்தில் கவனித்தல்
விடை: ஆ
19. கவனமின்மைக்கான காரணம் எது?
அ) ஆர்வமின்மை
ஆ) மனநிலை சரியின்மை
இ) உடல்நலக் குறைவு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: ஈ
20. "கவனச் சிதைவு" அல்லது "கவனக்
குறைவு" என்றால் என்ன?
அ) நாம் மேற்கொண்டுள்ள காரியத்திலிருந்து கவனம் வேறு
பக்கம் செல்வது
ஆ) அனைத்தையும் கவனிப்பது
இ) நீண்ட நேரம் கவனிப்பது
ஈ) ஒலியை மட்டும் கவனிப்பது
விடை: அ
21. கவனக் குறைப்பான்கள் (Distractors) எவை?
அ) கவனத்தை வேறு பக்கம் இழுப்பவை
ஆ) கவனத்தை அதிகரிப்பவை
இ) நினைவாற்றலைக் கூட்டுபவை
ஈ) பழக்கத்தை உருவாக்குபவை
விடை: அ
22. மாணாக்கனது கண்பார்வைக் குறைபாடு எதற்குத்
தடையாகும்?
அ) கவன வீச்சு
ஆ) வகுப்பறைக் கவனித்தல்
இ) கற்பனை
ஈ) ஆய்வுத் திறன்
விடை: ஆ
23. "Interest is latent attention; attention is interest in
action" என்று கூறியவர் யார்?
அ) பியாஜே
ஆ) ஸ்கின்னர்
இ) மக்குகல்
ஈ) பிராப்பெண்ட்
விடை: இ
24. புலன் உணர்வு (Sensation) என்றால்
என்ன?
அ) புலன் உறுப்புகள் தூண்டப்படுவதன் உடனடிப் பயன்
ஆ) அனுபவத்தின் அடிப்படையில் பொருளை அறிதல்
இ) நினைவில் வைத்தல்
ஈ) சிந்தித்தல்
விடை: அ
25. புலன் காட்சி (Perception) என்றால்
என்ன?
அ) புலன் உணர்வை மட்டும் அறிதல்
ஆ) புலன் உணர்விற்கு அனுபவத்தின் அடிப்படையில் பொருள்
ஊட்டி அறிதல்
இ) கனவு காணுதல்
ஈ) மறத்தல்
விடை: ஆ
26. புலன் காட்சிக்கான வாய்பாடு எது?
அ) புலன் உணர்வு + பொருள் அறிதல்
ஆ) புலன் உணர்வு - பொருள் அறிதல்
இ) பொருள் அறிதல் மட்டும்
ஈ) உணர்வு மட்டும்
விடை: அ
27. புலன் காட்சியைப் பாதிக்கும் அகக்காரணி எது?
அ) தூண்டலின் அளவு
ஆ) மனநிலை, கவர்ச்சி, தேவை
இ) ஒலியின் செறிவு
ஈ) வெளிச்சம்
விடை: ஆ
28. பொதுமைக் கருத்து (Concept) என்றால் என்ன?
அ) ஒரு பொருளை மட்டும் குறிப்பது
ஆ) பொதுப் பண்புள்ள பல பொருட்களைக் குறிப்பது
இ) ஒரு உணர்வை மட்டும் குறிப்பது
ஈ) ஒரு மொழியைக் குறிப்பது
விடை: ஆ
29. "நீலநிறம்" போன்ற ஒரே ஒரு பொதுப் பண்பை
மட்டும் கொண்ட கருத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) சிக்கலான பொதுமைக் கருத்து
ஆ) எளிமையான பொதுமைக் கருத்து
இ) கற்பனைப் பொருள் கருத்து
ஈ) தொடர்புக் கருத்து
விடை: ஆ
30. "சிறிய நீலநிற சதுரக் கட்டை" எத்தகைய
கருத்து?
அ) எளிமையானது
ஆ) சிக்கலானது
இ) கற்பனையானது
ஈ) உணர்வு சார்ந்தது
விடை: ஆ
31. பொதுமைக் கருத்து உருவாகும் முதல் நிலை எது?
அ) பொதுப் பண்புகளைத் தனிப்படுத்துதல்
ஆ) பல புலன்காட்சி அனுபவங்களைப் பெறுதல்
இ) ஒரு சொல்லைக் குறியாகக் கொள்ளுதல்
ஈ) சரிபார்த்தல்
விடை: ஆ
32. பொதுமைக் கருத்து உருவாகும் மையப் படிநிலை எது?
அ) ஒப்பிட்டு நோக்கல்
ஆ) பொதுப் பண்புகளைத் தனிப்படுத்துதல்
இ) சரிபார்த்தல்
ஈ) கருத்துக்களாக்கம்
விடை: ஆ
33. புருணரின் (Bruner) பொதுமைக்
கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டில் முதல் நிலை எது?
அ) உருவக நிலை
ஆ) குறியீட்டு நிலை
இ) செயல்படு நிலை
ஈ) சுருள் நிலை
விடை: இ
34. குழந்தை பொருள்களைப் பற்றிச் சிந்தித்தல் எந்த
நிலை?
அ) உருவக நிலை
ஆ) செயல்படு நிலை
இ) குறியீட்டு நிலை
ஈ) சுருள் நிலை
விடை: ஆ
35. குழந்தைகள் தாமாகவே எல்லாவற்றையும் கண்டறியும்
முறை எதற்குச் சிறந்தது?
அ) கற்றல்
ஆ) மறத்தல்
இ) உணர்தல்
ஈ) கனவு
விடை: அ
36. பியாஜேவின் (Piaget) அறிதிறன்
வளர்ச்சிப் படிநிலைகளில் முதல் நிலை எது?
அ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
ஆ) புலன் இயக்க நிலை
இ) பருப்பொருள் நிலை
ஈ) கருத்தியல் நிலை
விடை: ஆ
37. புலன் இயக்க நிலை எந்த வயது வரை நீடிக்கும்?
அ) 7 வயது
ஆ) 2 வயது
இ) 11 வயது
ஈ) 15 வயது
விடை: ஆ
38. செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலையின் வயது வரம்பு
எது?
அ) 0-2
ஆ) 2-7
இ) 7-11
ஈ) 11-15
விடை: ஆ
39. பருப்பொருள் நிலை (Concrete operational
stage) எந்த வயது வரை?
அ) 2-7
ஆ) 0-2
இ) 7-11
ஈ) 11-15
விடை: இ
40. கருத்தியல் நிலை (Formal operational
stage) எப்போது தொடங்குகிறது?
அ) 2 வயது
ஆ) 7 வயது
இ) 11 வயது
ஈ) 5 வயது
விடை: இ
41. எந்த நிலையில் குழந்தை பொருட்களின் நிலைத்த
தன்மையை அறிகிறது?
அ) புலன் இயக்க நிலை
ஆ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
இ) பருப்பொருள் நிலை
ஈ) கருத்தியல் நிலை
விடை: இ
42. எந்த நிலையில் உயிரற்ற பொருட்களையும்
உயிருள்ளவையாகப் பாவித்தல் காணப்படுகிறது?
அ) புலன் இயக்க நிலை
ஆ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
இ) பருப்பொருள் நிலை
ஈ) கருத்தியல் நிலை
விடை: ஆ
43. எந்த நிலையில் குழந்தையால் கற்பனை நிலைமைகள்
பற்றிச் சிந்திக்க முடியும்?
அ) புலன் இயக்க நிலை
ஆ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
இ) பருப்பொருள் நிலை
ஈ) கருத்தியல் நிலை
விடை: ஈ
44. பியாஜேயின் கூற்றுப்படி, ஒழுக்க
வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் எப்படி உள்ளன?
அ) தனித்தனி
ஆ) இணைந்தவை
இ) எதிர்மாறானவை
ஈ) சார்பற்றவை
விடை: ஆ
45. "சிந்தனை என்பது நமக்குள் எழும்
பேச்சு" என்று கூறியவர் யார்?
அ) ஸ்கின்னர்
ஆ) வாட்சன்
இ) சோம்ஸ்கி
ஈ) பியாஜே
விடை: ஆ
46. மொழித் திறன் வளர்ச்சியில் பரிசுகளும் பாராட்டும்
துலங்கல்களை வலுப்படுத்துகின்றன என்று கூறியவர் யார்?
அ) சோம்ஸ்கி
ஆ) வாட்சன்
இ) ஸ்கின்னர்
ஈ) புருணர்
விடை: இ
47. மொழியைக் கற்கும் சாதனையை மனிதர்கள் இயற்கையாகப்
பெற்றுள்ளனர் என்று கூறியவர் யார்?
அ) ஸ்கின்னர்
ஆ) சோம்ஸ்கி
இ) பியாஜே
ஈ) கெடல்
விடை: ஆ
48. ஆய்வுத் திறன் (Reasoning) என்றால்
என்ன?
அ) கனவு காணுதல்
ஆ) பழைய அனுபவங்களைப் புதுமுறையில் தொகுத்துப்
பிரச்சினையைத் தீர்த்தல்
இ) மறத்தல்
ஈ) உணர்தல்
விடை: ஆ
49. ஜான் டூயியின் கூற்றுப்படி ஆய்தலின் முதல்
படிநிலை எது?
அ) கருதுகோள் அமைத்தல்
ஆ) பிரச்சினையை உணர்தல் / புதிர் அறிதல்
இ) செய்திகளைத் தேடித் தொகுத்தல்
ஈ) சரிபார்த்தல்
விடை: ஆ
50. ஆய்தலில் கருதுகோள் அமைத்தல் என்பது என்ன?
அ) பிரச்சினையை உணர்தல்
ஆ) செய்திகளிலிருந்து பிரச்சினையைத் தீர்க்கும்
கருத்துக்களை வருவித்தல்
இ) முடிவைச் சோதித்தல்
ஈ) அனுபவங்களை மறத்தல்
விடை: ஆ
51. பிரச்சினைத் தீர்த்தலில் (Problem
solving) "கிளை வழி நிலை" என்று எதை ஜான் டூயி
அழைக்கிறார்?
அ) தீர்வு கண்ட நிலை
ஆ) புதிர் நிலை
இ) வெற்றி நிலை
ஈ) கற்றல் நிலை
விடை: ஆ
52. மீள ஆக்கக் கற்பனை (Reproductive
imagination) என்றால் என்ன?
அ) புதியதைப் படைத்தல்
ஆ) முன்னர் அனுபவித்த நிகழ்ச்சியை மனக்கண் முன்
கொணர்தல்
இ) கனவு காணுதல்
ஈ) மறத்தல்
விடை: ஆ
53. ஆக்கக் கற்பனை (Productive imagination) என்பது எது?
அ) பழைய சாயல்களைப் புதிய முறையில் அமைத்தல்
ஆ) அப்படியே நினைவு கூர்தல்
இ) ஒலியை உணர்தல்
ஈ) உடல் அசைவு
விடை: அ
54. பயன்வழிக் கற்பனை எதற்குப் பயன்படுகிறது?
அ) அழகுணர்ச்சிக்கு
ஆ) குறிப்பிட்ட இலக்கை அடையப் புதுவழி கண்டுபிடிக்க
இ) கனவு காண
ஈ) மறக்க
விடை: ஆ
55. அழகுணர் கற்பனையின் முதல் நிலை எது?
அ) துணிவு நிலை
ஆ) குறிக்கோள் நிலை
இ) பாவனை நிலை
ஈ) சுருள் நிலை
விடை: இ
56. பாவனை நிலை எந்த வயது வரை நீடிக்கும்?
அ) 3-6 வயது
ஆ) 8-12 வயது
இ) 14-18 வயது
ஈ) 0-2 வயது
விடை: அ
57. துணிவு நிலை எந்த வயதில் காணப்படுகிறது?
அ) 3-6
ஆ) 8-12
இ) 14-18
ஈ) 0-2
விடை: ஆ
58. குறிக்கோள் நிலை எந்த வயதில் தொடங்குகிறது?
அ) 14 வயது
ஆ) 8 வயது
இ) 3 வயது
ஈ) 11 வயது
விடை: அ
59. "பிராப்பெண்டின் கோட்பாடு" எதனை
விளக்குகிறது?
அ) கற்பனை
ஆ) கவனித்தல்
இ) மொழி
ஈ) நினைவு
விடை: ஆ
60. பிராப்பெண்டின் கூற்றுப்படி, தேர்வு செய்யப்படுவது எது?
அ) தூண்டல்
ஆ) துலங்கல்
இ) உணர்வு
ஈ) கற்பனை
விடை: ஆ
61. தொலைப்பேசிக் கருவிகளுக்கு பொதுவாக எத்தனை எண்கள்
தரப்படுகின்றன?
அ) 10-12
ஆ) 6-7
இ) 3-4
ஈ) 2-3
விடை: ஆ
62. மிக விரைவாகச் செல்லும் வாகனங்களுக்கு எத்தனை
எண்கள் தரப்படுகின்றன?
அ) 10-12
ஆ) 6-7
இ) 4-6
ஈ) 2-3
விடை: இ
63. "ஸ்கீமா" (Schema) என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?
அ) ஸ்கின்னர்
ஆ) பியாஜே
இ) பிராப்பெண்ட்
ஈ) புருணர்
விடை: ஆ
64. எந்த நிலையில் குழந்தை விதிகளைப் பின்பற்றி
விளையாட முடிகிறது?
அ) புலன் இயக்க நிலை
ஆ) பருப்பொருள் நிலை
இ) கருத்தியல் நிலை
ஈ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
விடை: ஆ
65. எந்த நிலையில் குழந்தை குற்றத்தின் அளவைக் கொண்டு
மதிப்பிடும் தன்மை கொண்டுள்ளது?
அ) கருத்தியல் நிலை
ஆ) பருப்பொருள் நிலை
இ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
ஈ) புலன் இயக்க நிலை
விடை: இ
66. எந்த நிலையில் குழந்தை குற்றத்தின் பின்னணி
நோக்கத்தைக் கொண்டு மதிப்பிடும்?
அ) பருப்பொருள் நிலை
ஆ) கருத்தியல் நிலை
இ) செயல்பாட்டுக்கு முற்பட்ட நிலை
ஈ) புலன் இயக்க நிலை
விடை: ஆ
67. பொதுமைக் கருத்துப் படங்கள் (Concept
mapping) எதற்கு உதவுகின்றன?
அ) மறக்க
ஆ) கருத்துகளின் இணைப்பை விளக்க
இ) கனவு காண
ஈ) உணர
விடை: ஆ
68. "எளிமை" என்ற பொதுமைக் கருத்துக்கு
எடுத்துக்காட்டு யார்?
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) பிராப்பெண்ட்
ஈ) ஸ்கின்னர்
விடை: அ
69. படைப்புக் கற்பனையின் வகைகள் யாவை?
அ) பயன்வழி, அழகுணர்
ஆ) மீள ஆக்க, ஆக்க
இ) பாவனை, துணிவு
ஈ) எளிய, சிக்கலான
விடை: அ
70. கற்பனையின் அடிப்படை எது?
அ) மறத்தல்
ஆ) அனுமானித்தல்
இ) உணர்தல்
ஈ) கேட்டல்
விடை: ஆ
71. "நினைவு" என்பது எந்த வகைக் கற்பனையைப்
போன்றது?
அ) ஆக்கக் கற்பனை
ஆ) மீள ஆக்கக் கற்பனை
இ) பயன்வழிக் கற்பனை
ஈ) அழகுணர் கற்பனை
விடை: ஆ
72. ஆய்தலில் கடைசிப் படிநிலை எது?
அ) கருதுகோள் அமைத்தல்
ஆ) பிரச்சினையை உணர்தல்
இ) தேர்ந்தெடுத்த கருதுகோளைக் கொண்டு தீர்வு காணல்
ஈ) செய்திகள் தேடல்
விடை: இ
73. வகுப்பறையில் மாணவர்களின் கவனத்தைப் பெற ஆசிரியர்
என்ன செய்ய வேண்டும்?
அ) ஒரே முறையில் கற்பித்தல்
ஆ) இயல்பான ஊக்கிகளைப் பயன்படுத்துதல்
இ) சலிப்பூட்டும் செயல்கள்
ஈ) உரக்கப் பேசுதல்
விடை: ஆ
74. "செயல்முறைக் கல்வி" என்பது யாருடைய
கருத்தின் விளைவு?
அ) ஸ்கின்னர்
ஆ) பியாஜே
இ) பிராப்பெண்ட்
ஈ) வாட்சன்
விடை: ஆ
75. எத்தகைய கற்பனை எத்திசையிலும், எம்முறையிலும் செல்லலாம்?
அ) பயன்வழிக் கற்பனை
ஆ) அழகுணர் கற்பனை
இ) மீள ஆக்கக் கற்பனை
ஈ) பின்பற்றும் ஆக்கக் கற்பனை
விடை: ஆ
Next Video: Special TET 2026 | Paper II | Psychology | Unit 4
சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க மேம்பாடு (Social, Emotional and Moral Development)
Social development – Factors of Social development – Social Maturity – Erikson’s stages of social development – Emotional development – meaning – Positive and Negative emotions – Emotional control and maturity – Place of emotions in life – Significance of Emotional Intelligence – Moral development – Kohlberg’s stages of Moral development.
Most expected Questions in Special TET 2026 | Paper II | Psychology
Unit 1: click here to know the questions.
🎯 Why These 50 Questions are Important for TET 2026
These questions are not randomly selected. They are based on:
Previous year TET question papers
Repeated concepts in TN TRB exams
High-weightage topics in Unit 2
Common misconceptions cleared with correct answers
Mastering these 50 questions alone can help you score 10–12 marks easily in the Psychology section.
📌 Tips to Remember Psychology Unit 2 for TET 2026
Understand, don't memorize – Focus on the nature and scope of each concept.
Link theorist to theory – Create a small chart of names (Wundt, Watson, Freud, Piaget, etc.) and their contributions.
Practice MCQs daily – At least 10–15 questions per day.
Revise definitions – Especially Educational Psychology definitions by Kolesnikov, Crow, etc.
Use bilingual notes – Tamil + English helps in faster recall.
