10th Tamil First Revision 2026: Original Question Paper & Official Answer Key | PDF Download + Analysis
Are you searching for the 10th Tamil First Revision Original Question Paper 2026 along with a verified official answer key? You've come to the right place.
This guide provides a detailed exam pattern breakdown, section-wise weightage, expert preparation strategies, and essential resources to help you score high in your Tamil Nadu First Revision exams.
📌 Overview of the 10th Tamil First Revision Exam 2026 (Expected Pattern)
The Tamil Nadu State Board 10th Tamil First Revision Exam is designed to assess students’ understanding of prose, poetry, grammar, and writing skills covered in the first portion of the academic year. The paper tests reading comprehension, literary analysis, grammar accuracy, and creative writing ability.
📄 Actual Mark Distribution & Section Analysis (Based on Provided Paper)
Here is the accurate mark distribution and section analysis based on the actual 10th Tamil Model First Revision 2026 Question Paper you provided. This replaces the earlier general estimate with the real, structured format:
📑 Section-Wise Breakdown:
- பகுதி – I (Part I) – Multiple Choice Questions
- Marks: 15 × 1 = 15 Marks
- Questions: 15 MCQs
Topics Covered: Grammar splitting, literary terms, geography of ancient Tamil kingdoms, seasons, poets, figures of speech, book awards, sentence types, poetic meters, and comprehension from classical poetry.
பகுதி – II (Part II)
- Sub-Part 1 (4 out of 6 questions) → 4 × 2 = 8 Mar
- Sub-Part 2 (5 out of 7 questions) → 5 × 2 = 10 Marks
- Total for Part II: 18 Marks
Question Types: Short answers, grammar explanations, literature references, matching, quoting from texts.
பகுதி – III (Part III)
- Sub-Part 1 (2 out of 3 questions, Q31 compulsory) → 2 × 3 = 6 Marks
- Sub-Part 2 (2 out of 3 questions) → 2 × 3 = 6 Marks
- Total for Part III: 12 Marks
Question Types: Explanatory short notes, passage-based questions, commentary on literary excerpts, poetic recitation.
பகுதி – IV (Part IV) – All questions compulsory
- Marks: 5 × 5 = 25 Marks
- Question Types:
- Essay/description from prose
- Letter writing (formal/informal)
- Picture-based description
- Form filling
- Moral essay or translation
பகுதி – V (Part V) – Descriptive Long Answers
- Marks: 3 × 8 = 24 Marks
- All questions compulsory (with internal choice)
- Topics: Tamil culture, book analysis, women achievers, essay/ speech writing.
Question Paper:
வகுப்பு: 10 மாதிரி முதல்
திருப்புதல் தேர்வு - 2026
காலம்: 3.00 மணி தமிழ் மதிப்பெண்கள்: 100
------------------------------------------------------------------------------------------------------
பகுதி - I
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினை எழுதவும். 15 x 1 = 15
1.
எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா
ஈ) எந்தம்+தமிழ்+நா
2.
"கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" - தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே:
அ) பாடிய;
கேட்டவர் ஆ) பாடல்;
பாடிய இ) கேட்டவர்;
பாடிய ஈ) பாடல்;
கேட்டவர்
3.
நச்சிலை
வேல் கோக்கோதை நாடு, நல்யானை கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படும் நாடுகள்
முறையே:
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
4.
சித்திரை, வைகாசி மாதங்களை __________
காலம் என்பார்.
அ) முதுவேனில் ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
5.
'உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்' என்று
கூறியவர்:
அ) கபிலர்
ஆ) நச்செள்ளையார்
இ) ஔவையார்
ஈ) சாத்தனார்
6.
உவப்பின்
காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
அ) இடவழுவமைதி ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி
7.
வண்ணதாசனுக்கு
சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின்
இ) அந்நியமற்ற நதி
ஈ) உயரப் பறத்தல்
8.
"மகிழுந்து வருமா?" என்பது:
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
9.
தூங்கல்
ஓசைக்குரிய பா வகை:
அ) ஆசிரியப்பா ஆ) வஞ்சிப்பா
இ) கலிப்பா
ஈ) வெண்பா
10.
காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
11.
நன்மொழி
என்பது:
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
பாடலைப்
படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடையளி:
"பகர்வனர் திரிதரு
நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் ;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
12.
இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது?
அ) தேம்பாவணி ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) பரிபாடல்
13.
காருகர்
- பொருள் தருக:
அ) உப்பு வணிகர் ஆ) நெசவாளர்
இ) வெற்றிலை வணிகர்
ஈ) இறைச்சி விற்பவர்
14.
இப்பாடலில்
பயின்று வந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக:
அ) பட்டினும், மயிரினும் ஆ) பகர்வனர், நகரவீதி
இ) பகர்வனர், பட்டினும் ஈ) காருகர், இருக்கையும்
15.
வழங்கல்
- இலக்கணக்குறிப்பு:
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்
பகுதி – II பிரிவு
- 1
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
வினா
எண் 21 கட்டாயம்
4 x 2 = 8
16.
விடைக்கேற்ற
வினாவினை அமைக்க: அ) மிக மெல்லிய பழத்தோல் வகை தொலி எனப்படுகிறது. ஆ)
மொழிபெயர்ப்பு எல்லாக் காலகட்டத்திற்கும் தேவையான ஒன்று.
17.
"மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ
வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
18.
குறிப்பு
வரைக: அவையம்.
19.
'பலகை' என்பதைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்துக.
20. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை
அட்டவணைப்படுத்துக.
21. 'கண்' என
முடியும் திருக்குறளைப் பிழையின்றி எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டு5 x 2 = 10
22.
சொல்
வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
23.
பகுபத
உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்.
24. கலைச்சொல் தருக: அ) Culture ஆ) Monolingual.
25. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
26. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில்
அமைக்க:
அ) மனக்கோட்டை ஆ) ஆறப்போடுதல்.
27.
"செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும், அதுபோல யாம்பாடி" - இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
28. வினைமுற்றை வினையாலணையும் பெயராக
மாற்றித் தொடரை இணைத்து எழுதுக: அ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.
போட்டித் தேர்வில் வென்றார்.
பகுதி – III பிரிவு
– 1
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2 x 3 = 6
வினா
எண் 31 கட்டாயம்
வினா
29. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு
இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
30. 'புளியங்கன்று ஆழமாக
நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத்
தொடர்களில் அமைக்க.
31.
உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக:
சங்க இலக்கியமான
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் 'ஓங்கு பரிபாடல்' எனும் புகழுடையது. உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக்
கூறியுள்ளனர். இன்று இருபத்தி நான்கு பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன.
அ) இப்பத்தியில் குறிப்பிடப்படும் சங்க
இலக்கியம் எது?
ஆ) பரிபாடலில் எத்தனைப் பாடல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன?
இ) பரிபாடலின் சிறப்புப் பெயர் யாது?
பிரிவு – 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
சுருக்கமாக விடையளிக்கவும். 2
x 3 = 6
32.
வைத்தியநாதபுரி
முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய
இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
34. 'அள்ளல்' எனத்
தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலினைப் பிழையின்றி எழுதுக. (அல்லது) 'நவமணி வடக்க' எனத் தொடங்கும்
தேம்பாவணிப் பாடல்.
பிரிவு - 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
2
x 3 = 6
35. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் எழுதுக.
36. "நச்சுப் படாதான் செல்வம்
நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று" - இக்குறளில் பயின்று வரும் அணியினைச்
சுட்டி விளக்கம் தருக.
37.
"இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளும் உவப்ப
துடைத்து" - அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 5 x 5 = 25
38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச்
செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. (அல்லது)
ஆ) கருணையன் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்தம் பூக்கள் போன்ற
உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
39. அ) உங்கள் தெருவில் மின் விளக்குகள்
பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் நடப்போருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவண செய்ய
மின்வாரிய அலுவலகத்திற்கு கடிதம் எழுதுக. (அல்லது)
ஆ) மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:
41.
கொடுக்கப்பட்டுள்ள
விவரங்களைப் பயன்படுத்தி, மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக. (பெயர்: கார்குழலி; தந்தை பெயர்: கோதிலான்; முகவரி: 25 வல்வில் ஓரி தெரு, கொல்லிமலை,
நாமக்கல் மாவட்டம்)
42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய
அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும் குறித்து ஐந்து தொடர்களில் எழுதுக. (அல்லது)
ஆ) மொழிபெயர்க்க: The golden sun gets up early in the morning
and starts its bright rays to fade away the dark. The milky clouds start their
wandering. The colourful birds start twitting their morning melodies. The cute
butterflies dance around the flowers.
பகுதி - V
அனைத்து வினாக்களுக்கும் விரிவான
விடையளிக்கவும். 3
x 8 = 24
43. அ) சங்க காலத் தமிழர்களின்
விருந்தோம்பல் பண்பினைச் சான்றுகளுடன் விளக்குக. (அல்லது)
ஆ) நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது
என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
44. அ) 'புயலிலே ஒரு தோணி' என்ற
கதையில் உள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் புயலில்
தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கிறது? (அல்லது)
ஆ) 'மங்கையராயப்
பிறப்பதற்கே' - பாடத்தில் வரும் சாதனைப் பெண்மணிகளுள்
உங்களைக் கவர்ந்த மூவரைப் பற்றி எழுதுக.
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும்
தலைப்பில் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. (அல்லது)
ஆ) 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்'
என்ற தலைப்பில் மேடை உரைக்கான உரைக்குறிப்புகளை உருவாக்குக.
