11th Tamil First Revision 2026: Original Question Paper & Official Answer Key | PDF Download + Analysis

 11th Tamil First Revision 2026: Original Question Paper & Official Answer Key | PDF Download + Analysis 

Are you searching for the 11th Tamil First Revision Original Question Paper 2026 along with a verified official answer key? You've come to the right place.

This guide provides a detailed exam pattern breakdown, section-wise weightage, expert preparation strategies, and essential resources to help you score high in your Tamil Nadu First Revision exams.

📌 Overview of the 11th Tamil First Revision Exam 2026 (Expected Pattern)

                   The Tamil Nadu State Board 11th Tamil First Revision Exam is designed to assess students’ understanding of prose, poetry, grammar, and writing skills covered in the first portion of the academic year. The paper tests reading comprehension, literary analysis, grammar accuracy, and creative writing ability.

📄 Actual Mark Distribution & Section Analysis (Based on Provided Paper)

                        Here is the accurate mark distribution and section analysis based on the actual 11th Tamil Model First Revision 2026 Question Paper you provided. This replaces the earlier general estimate with the real, structured format:

📑 Section-Wise Breakdown:

  • பகுதி – I (Part I) – Multiple Choice Questions
  • Marks: 14 × 1 = 14 Marks
  • Questions: 15 MCQs

                       Topics Covered: Grammar splitting, literary terms, geography of ancient Tamil kingdoms, seasons, poets, figures of speech, book awards, sentence types, poetic meters, and comprehension from classical poetry.

பகுதி – II (Part II)

  • Sub-Part 1 (4 out of 6 questions) → 4 × 2 = 8 Mar
  • Sub-Part 2 (5 out of 7 questions) → 5 × 2 = 10 Marks
  • Total for Part II: 18 Marks

Question Types: Short answers, grammar explanations, literature references, matching, quoting from texts.

பகுதி – III (Part III)

  • Sub-Part 1 (2 out of 3 questions, Q31 compulsory) → 2 × 3 = 6 Marks
  • Sub-Part 2 (2 out of 3 questions) → 2 × 3 = 6 Marks
  • Total for Part III: 12 Marks

Question Types: Explanatory short notes, passage-based questions, commentary on literary excerpts, poetic recitation.

பகுதி – IV (Part IV) – All questions compulsory

  • Marks: 5 × 5 = 25 Marks
  • Question Types:
  • Essay/description from prose
  • Letter writing (formal/informal)
  • Picture-based description
  • Form filling
  • Moral essay or translation

பகுதி – V (Part V) – Descriptive Long Answers

  • Marks: 3 × 8 = 24 Marks
  • All questions compulsory (with internal choice)
  • Topics: Tamil culture, book analysis, women achievers, essay/ speech writing.

Question Paper:

வகுப்பு : 11                               மாதிரி முதல் திருப்புதல் தேர்வு - 2026

நேரம் : 3.00 மணி                                      பொதுத்தமிழ்                  மதிப்பெண்கள் : 90

------------------------------------------------------------------------------------------------------பகுதி - I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                                                                   14 X 1 = 14

1.       "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை" என்றவர் யார்?

அ) பாப்லோ நெரூடா      ஆ) ரசூல் கம்சதோவ்      இ) வால்ட் விட்மன்      ஈ) மல்லார்மே

2.      கூற்று: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.

காரணம்: சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.

அ) கூற்று சரி; காரணம் தவறு      ஆ) இரண்டும் சரி      இ) இரண்டிற்கும் தொடர்பில்லை      ஈ) கூற்று தவறு; காரணம் சரி

3.      'அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன்' - யார் யாரிடம் கூறியது?

அ) அமைச்சர் கவிஞரிடம்      ஆ) மன்னர் அமைச்சரிடம்      இ) அமைச்சர் மன்னரிடம்      ஈ) மன்னர் அமுதவல்லியிடம்

4.      "மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்

அ) வால்ட் விட்மன்      ஆ) எர்னஸ்ட் காசிரர்      இ) ஆற்றூர் ரவிவர்மா      ஈ) பாப்லோ நெரூடா

5.      'வரை' எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

அ) கடல்      ஆ) வயல்      இ) மரம்      ஈ) மலை

6.     நெடுங்குன்று - இலக்கணக்குறிப்பு தருக.

அ) உவமைத்தொகை      ஆ) பண்புத்தொகை      இ) வினைத் தொகை      ஈ) தொழிற்பெயர்

7.      தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

அ) சீறாப்புராணம்      ஆ) மனோன்மணியம்      இ) புரட்சிக்கவி      ஈ) காவடிச்சிந்து

8.     ஜனப்பிரளயம் என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லைத் தேர்க.

அ) மக்கள் அலை      ) உயிர் அலை      இ) மக்கள் வெள்ளம்      ஈ) மக்கள் அவை

9.     துன்பப்படுபவர் யார்?

அ) நாவைக் காக்காதவர்      ஆ) தீக்காயம் பட்டவர்      இ) தீயினால் சுட்டவர்      ஈ) பொருளைக் காக்காதவர்

10.   பிழைத் திருத்தத்தில் Dt இக்குறியீடு உணர்த்தும் பொருள்.

அ) ஒற்றை மேற்கோள் குறியிடுக      ஆ) தடித்த எழுத்தில் மாற்றுக      இ) இடைவெளி தருக      ஈ) சொல்லையோ நீக்குக

11.     கருப்பட்டி, பணங்கற்கண்டு போன்றவை _________

அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்      ஆ) நேரடிப் பொருள்கள்      இ) இரண்டும் சரி      ஈ) அ-தவறு, ஆ-சரி

12.    "விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்" - என்றுரைத்தவர்.

அ) பிரமிள்      ஆ) அழகிய பெரியவன்      இ) அப்துல் ரகுமான்      ஈ) இரா. மீனாட்சி

13.    'சுதந்திர தாகம்' என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) சு.வில்வரத்தினம்      ஆ) சி.சு.செல்லப்பா      இ) ஜெயமோகன்      ஈ) அண்ணாமலையார்

14.   பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் யாவை?

அ) பகுதி, விகுதி      ஆ) பகுதி, இடைநிலை      இ) பகுதி, சந்தி      ஈ) விகுதி, விகாரம்

 

பகுதி - II

பிரிவு - 1: செய்யுள் குறுவினாக்கள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                                3 X 2 = 6

15.   ஐங்குறுநூறு - குறிப்பு வரைக.

16.   உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?

17.    எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

18.   "உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ" - தொடர் உணர்த்தும் பொருள் யாது?

பிரிவு - 2: உரைநடை குறுவினாக்கள்

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                                                   2 X 2 = 4

19.   தமிழ்நாட்டின் மாநில மரம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

20.  'கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

21.    "நாழிக்குள் திணிக்கும் மருந்து போல்" என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

பிரிவு - 3: மொழிப் பயிற்சி

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.                                                        7 X 2 = 14

22.   மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: (அ) உலை, உளை, உழை (அல்லது) (ஆ) கலை, களை, கழை.

23.   பகுபத உறுப்பிலக்கணம் தருக: (அ) பிரிந்தோர் (அல்லது) (ஆ) பயின்றார்.

24.  புணர்ச்சி விதி தருக: (அ) பேரழகு (அல்லது) (ஆ) மண்ணுடை.

25.  வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக: கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மை தீமைகளை புரிந்து பேசுவர்.

26.  கலைச்சொல்லாக்கம் தருக: (அ) Touch Screen (ஆ) Translator.

27.   பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக: தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சிப் போனாப் பதட்டமாயிரும்.

28.  தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் ஆக்குக: பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி.

29.  வினாத் தொடராக்குக: தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.

30.  மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக: (அ) அவசரக் குடுக்கை (அல்லது) (ஆ) சொந்தக் காலில் நிற்றல்.

 

பகுதி - III

பிரிவு - 1: செய்யுள் சிறுவினாக்கள்

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                                                   2 X 4 = 8

  1. 31.    கவிதை ஒரு படைப்புச் செயல்பாடு என்பதை விளக்குக.
  2. 32.   'சேரநாடு செல்வ வளம் மிக்கது' என்ற கூற்றிற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.
  3. 33.  கழுகுமலைத் தலத்தின் சிறப்புகளைக் காவடிச்சிந்து கொண்டு விளக்குக.
  4. 34.  "உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

பிரிவு - 2: உரைநடை சிறுவினாக்கள்

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                                                   2 X 4 = 8

35.  ஜீவாவின் பேச்சு நடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை?

36.  சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் - குறிப்பு வரைக.

37.   திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டுத் தருக.

38.  வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை விளக்குக.

பிரிவு - 3: பொதுச் சிறுவினாக்கள்

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.                                                                       3 X 4 = 12

39.  (அ) வேற்றுமை அணியைச் சான்றுகளுடன் விளக்குக. (அல்லது) (ஆ) பிறிதுமொழிதல் அணியைச் சான்றுடன் விளக்குக.

40.  (அ) செந்துறைப் பாடாண்பாட்டு - துறை விளக்கம் தருக. (அல்லது) (ஆ) உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.

41.   இலக்கிய நயம் பாராட்டுக: (மையக் கருத்துடன் மூன்று நயங்களைச் சுட்டுக)

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி / பேணி வளர்த்திடும் ஈசன்; / மண்ணுக்குள்ளே சிலமூடர் -நல்ல / மாதர் அறிவைக் கெடுத்தார்"

42.  (அ) தமிழாக்கம் தருக: 1. The pen is mightier than the sword. 2. Knowledge rules the world. (அல்லது) (ஆ) "சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்..." - நாமக்கல் கவிஞர் பாடலுக்கு இலக்கிய நயம் பாராட்டுக.

43.  கருத்துப் படத்தைப் புரிந்து கொண்டு பத்தியாக எழுதுக: (பொருள் இலக்கணம்: அகப்பொருள், புறப்பொருள் விளக்கப்படம்).


பகுதி - IV (நெடுவினாக்கள்)

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                                                                   3 X 6 = 18

44.  (அ) 'ஒவ்வொரு புல்லையும்' - கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.

(அல்லது)

(ஆ) பாரதிதாசன் ஒரு 'புரட்சிக்கவி' என்பதை உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.

45.  (அ) 'தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்' என்பதை நிறுவுக.

(அல்லது)

(ஆ) பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட மாறுதல்களை விவரிக்க.

46.  (அ) வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.

(அல்லது)

(ஆ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

 

பகுதி - V

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.                                                            4 + 2 = 6

47.   (அ) 'சிற்றூரும் வரப்பெடுத்த' எனத் தொடங்கும் புரட்சிக் கவி பாடலை எழுதுக. (4 மதிப்பெண்)

48.  'பொருட்டு' என முடியும் குறள். (2 மதிப்பெண்)

Download the Tamil First Revision 2026 👈 Click here.

Answer key:

வகுப்பு : 11                               மாதிரி முதல் திருப்புதல் தேர்வு - 2026

நேரம் : 3.00 மணி                       பொதுத்தமிழ்                              மதிப்பெண்கள் : 90

------------------------------------------------------------------------------------------------------

பகுதி - I (ஒரு மதிப்பெண் வினாக்கள்)

1.       ஆ) ரசூல் கம்சதோவ்

2.      ஆ) இரண்டும் சரி

3.      ஆ) மன்னர் அமைச்சரிடம்

4.      ஈ) பாப்லோ நெரூடா

5.      ஈ) மலை

6.     ஆ) பண்புத்தொகை

7.      ஆ) மனோன்மணியம்

8.     இ) மக்கள் வெள்ளம்

9.     அ) நாவைக் காக்காதவர்

10.   ஈ) சொல்லையோ, எழுத்தையோ நீக்குக

11.     இ) இரண்டும் சரி

12.    இ) அப்துல் ரகுமான்

13.    ஆ) சி.சு.செல்லப்பா

14.   அ) பகுதி, விகுதி

பகுதி - II (குறுவினாக்கள்)

பிரிவு - 1: செய்யுள்

15.   ஐங்குறுநூறு: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அகப்பொருள் சார்ந்த ஐந்து திணைகளை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) தலா 100 பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது.

16.   தோள் வலிமையால் விளைந்தன: உழைப்பாளர்களின் வியர்வையால் காடுகள் கழனிகளாயின; வறண்ட நிலங்கள் சோலைகளாயின; பல பயிர்கள் விளைந்து நாடு வளம் பெற்றது.

17.    மருந்து எப்போது தேவையில்லை: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, பின் உணவை உட்கொண்டால் ஒருவனுக்கு மருந்தின் தேவை ஏற்படாது என வள்ளுவர் கூறுகிறார்.

18.   விழுமிய வேந்து நீ: உழவர்களின் பெருமையை உணர்த்துகிறது. உலகிற்கு அச்சாணியாக விளங்கும் உழவர்களே மற்ற அனைவருக்கும் மேலான அரசர் போன்றவர் என்பது இதன் பொருள்.

 

பிரிவு - 2: உரைநடை

19.   மாநில மரம்: தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது; நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் தன்மையுடையது.

20.  கோட்டை: 'கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் 'வல்லரண்' அல்லது 'பாதுகாக்கப்பட்ட பகுதி' என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது.

21.    ஜீவானந்தம் பேச்சு - உவமை: மருத்துவர் ஒரு நோயாளியின் வாய்க்குள் மருந்தைத் திணிப்பது போலல்லாமல், ஜீவாவின் பேச்சு மக்களுடைய மனங்களில் மிக இயல்பாகவும் ஆழமாகவும் பதிந்தது.

 

பிரிவு - 3: மொழிப் பயிற்சி

22.   மயங்கொலித் தொடர்: * உலை, உளை, உழை: உலை நீரில் அரிசியைப் போட உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தையே உளைச்சல் இல்லாமல் செலவிட வேண்டும்.

23.   பகுபத உறுப்பிலக்கணம்: * பிரிந்தோர்: பிரி + த்(ந்) + த் + ஓர். (பிரி - பகுதி, த் - சந்தி, ந் - விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி).

24.  புணர்ச்சி விதி: * பேரழகு: பெருமை + அழகு. (விதி 1: ஈறு போதல். விதி 2: ஆதி நீடல். விதி 3: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்).

25.  வல்லின மெய்கள்: கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளைப் புரிந்து பேசுவர்.

26.  கலைச்சொல்: Touch Screen - தொடுதிரை; Translator - மொழிபெயர்ப்பாளர்.

27.   எழுத்து வழக்கு: தேர்வு எழுத வேகமாகச் செல்லுங்கள், நேரம் கழித்துச் சென்றால் பதற்றம் ஆகிவிடும்.

 

பகுதி - III (சிறுவினாக்கள்)

32.   சேரநாடு செல்வ வளம்: சேர நாட்டின் ஆறுகளில் பொன்னும், கடலில் முத்தும், நிலத்தில் மலர்களும் செழித்து விளங்கியதால் அது செல்வ வளம் மிக்கதாகக் கூறப்படுகிறது.

33.  ஜீவாவின் பேச்சுநடை: ஜீவாவின் பேச்சு எளிமையானது, உணர்ச்சிப்பூர்வமானது மற்றும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் என சுந்தரராமசாமி கூறுகிறார்.

34.  சமணப் பள்ளிகளும் பெண்கல்வியும்: சமணத் துறவிகள் கல்விப் பணியை அறமாகச் செய்தனர். அங்குப் பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட்டதுடன், பெண்களும் ஆசிரியர்களாக (குரத்திகள்) பணியாற்றினர்.

35.  அ) வேற்றுமை அணி: இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பின்னர் அவற்றுள் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாகும்.

o   சான்று: "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே / நாவினால் சுட்ட வடு".

 

பகுதி - V (மனப்பாடப் பகுதி)

47.   புரட்சிக்கவி பாடல்: "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறும்" எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுதல்.

48.  குறள்:

o   பொருட்டு: "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் / தொகுத்தவற்றுள் எல்லாந் தலை" (அல்லது தொடர்புடைய குறள்).

o   நோய்நாடி: "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் / வாய்நாடி வாய்ப்பச் செயல்".

 


Download the FIRST REVISION 2026 👈 Click here.