TNTET 2026 Paper 2 Psychology Unit 2

Special TET 2026 Paper II Psychology Unit 2: 50 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)


Special TET 2026 Paper II Psychology Unit 2: 50 Most Expected Questions & Answers (கல்வி உளவியல்)

Are you preparing for Special TET 2026 Paper II? Then mastering Psychology Unit 2 is essential. This unit covers the nature, methods, branches, and significance of Educational Psychology – and it's a high-scoring area.

In this blog post, we provide 50 very important and most expected questions with four options and answers – all based on the latest TET syllabus and previous exam patterns.

Let's dive in.

📖 Unit 2 Topics Covered (As per Syllabus)

  • Definition of Psychology and Educational Psychology

  • Methods of Psychology (Introspection, Observation, etc.)

  • Branches of Psychology

  • Nature and Scope of Educational Psychology

  • Significance of Educational Psychology to the Teacher

✅ 50 Most Expected Questions & Answers

Special TET July-2026 | Paper II | Psychology | Unit 2

மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் (Human Growth and Development) 

Interaction of Nurture and Nature. Concept, Distinction among Growth, Development and Maturation. General Principles of Growth and Development – Characteristics, Dimensions of Development – Physical, Cognitive, Emotional, Social and Moral – Phases of Development and Development tasks – Infancy, Childhood and Adolescence.

Most expected 30 Questions in Special TET 2026 | Paper II | Psychology

பாடம்: கல்வி உளவியல்
                மனித வளர்ச்சியும் முன்னேற்றும்
வகை: சரியான விடையைத் தேர்வு செய்க (Multiple Choice Questions)
மொத்த வினாக்கள்: 50

1. மனிதனது வளர்ச்சியையும் நடத்தையையும் உறுதி செய்யும் இரண்டு முக்கிய காரணிகள் யாவை?
அ) மரபும் குழநிலையும்
ஆ) உடலும் மனமும்
இ) கல்வியும் பொருளாதாரமும்
ஈ) உணவும் உடற்பயிற்சியும்

2. பிறப்பிலேயே மாற்ற முடியாதபடி நிர்ணயிக்கப்படுவது எது?
அ) குழநிலை
ஆ) மரபு நிலை
இ) கற்றல்
ஈ) அனுபவம்

3. தொடர்ந்து மாற்றம் பெற்றும், விரிவை அடைந்தும் காணப்படும் செல்வாக்கு எது?
அ) மரபு
ஆ) குரோமோசோம்
இ) குழநிலை
ஈ) ஜீன்

4. "ஒருவனால் செய்து முடிக்கப்படும் செயல்களை, தக்க வாய்ப்புகளும், ஊக்குவிக்கும் குழநிலையும் தரப்பட்டால், வேறு எந்த ஒருவனாலும் செய்து முடிக்க இயலும்" - இது யாருடைய கருத்து?
அ) மக்கைவர்
ஆ) வாட்சன்
இ) பேஜ்
ஈ) ரோஜா

5. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் மரபு மற்றும் குழநிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது என்பது யாருடைய கருத்து?
அ) வாட்சன் மட்டும்
ஆ) மக்கைவர் மற்றும் பேஜ்
இ) ரோஜா மட்டும்
ஈ) ஜேம்ஸ்

6. ஒருவனிடம் இடம் பெற்றுள்ள, பிறப்பால் தோன்றிய தனித்த தன்மைகளின் ஒட்டுமொத்த நிலையைக் குறிப்பது எது?
அ) குழநிலை
ஆ) முதிர்ச்சி
இ) மரபு
ஈ) கற்றல்

7. ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றியிருக்கும் பல்வேறு விதமான தூண்டல்களின் தொகுப்பு எது?
அ) மரபு
ஆ) குழநிலை
இ) முன்னேற்றம்
ஈ) வளர்ச்சி

8. மனித உயிரணுவில் ஒவ்வொரு குரோமோசோமிலும் எத்தனை ஜீன்கள் காணப்படுகின்றன?
அ) 1,000 முதல் 5,000 வரை
ஆ) 20,000 முதல் 42,000 வரை
இ) 50,000 முதல் 1,00,000 வரை
ஈ) 100 முதல் 500 வரை

9. ஆணின் உயிரணுவில் கடைசி ஜோடியான 23வது ஜோடியில் காணப்படும் குரோமோசோம்கள் யாவை?
அ) X,X
ஆ) Y,Y
இ) X,Y
ஈ) X, Y இல்லை

10. ஒரு குழந்தையின் குணநல்களில் எத்தனை தலைமுறை மூதாதையர்களின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது?
அ) 2 தலைமுறை
ஆ) 4 தலைமுறை
இ) 6 தலைமுறை
ஈ) 8 தலைமுறை

11. ஒரு உயிரியின் உருவ அளவும், எடையும் அதிகரிப்பது எது?
அ) முன்னேற்றம்
ஆ) முதிர்ச்சி
இ) வளர்ச்சி
ஈ) கற்றல்

12. வளர்ச்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) வாழ்நாள் முழுவதும் தொடரும்
ஆ) முதிர்ச்சிக்குப் பின் நின்று போகும்
இ) எப்போதும் ஒரே சீராக இருக்கும்
ஈ) உடலின் எல்லாப் பாகங்களும் ஒரே விகிதத்தில் வளரும்

13. ஒரு உயிரியின் அமைப்பிலோ அல்லது இயங்கும் தரத்திலோ ஏற்படும் மேம்பாடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பது எது?
அ) வளர்ச்சி
ஆ) முதிர்ச்சி
இ) முன்னேற்றம்
ஈ) குழநிலை

14. முன்னேற்றத்தின் இயல்பு பற்றிய சரியான கூற்று எது?
அ) வயது வந்தவுடன் நின்று விடும்
ஆ) தொடர்ச்சியானது, வாழ்நாள் முழுவதும் நிகழும்
இ) எப்போதும் நேர்கோட்டில் அமையும்
ஈ) ஒரே சீரான விகிதத்தில் அமையும்

15. வளர்ச்சியைப் பற்றிய சரியான கூற்று எது?
அ) தரத்தோடு தொடர்புடையது, துல்லியமாக அளக்க முடியும்
ஆ) அளவீட்டுக்குட்பட்டது, துல்லியமாக அளக்க முடியும்
இ) அளக்க முடியாது
ஈ) வாழ்நாள் முழுவதும் சமமாக இருக்கும்

16. முன்னேற்றத்தைப் பற்றிய சரியான கூற்று எது?
அ) துல்லியமாக அளக்க முடியும்
ஆ) உருப்பெருக்கத்தால் மட்டுமே ஏற்படும்
இ) தரத்தோடு தொடர்புடையது, துல்லியமாக அளக்க முடியாது
ஈ) பூப்பெய்தியவுடன் நின்றுவிடும்

17. வளர்ச்சி எதனால் பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது?
அ) கற்றல்
ஆ) குழநிலை
இ) மரபு
ஈ) அனுபவம்

18. முன்னேற்றம் எதனால் பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது?
அ) மரபு
ஆ) கற்றலும் அனுபவங்களும்
இ) வயது
ஈ) உயரம்

19. "மனிதன் மனவெழுச்சிகள் என்னும் பரந்த கடலில் மிதக்கும் ஒரு சிறு அறிவுத் துரும்புக்குச் சமமானவன்" - இக்கூற்று எதை வலியுறுத்துகிறது?
அ) அறிவின் மேன்மை
ஆ) மனவெழுச்சியின் முக்கியத்துவம்
இ) உடல் வளர்ச்சியின் அவசியம்
ஈ) மரபின் சிறப்பு

20. ஜேம்ஸ் - லாங் கொள்கையின்படி, உணர்ச்சி எவ்வாறு தோன்றுகிறது?
அ) மூளை முதலில் உணர்ந்து பின் உடல் மாறுகிறது
ஆ) உடல் மாற்றங்களுக்குப் பின்னரே உணர்ச்சி எழுகிறது
இ) உணர்ச்சிக்கும் உடல் மாற்றத்திற்கும் தொடர்பில்லை
ஈ) மூளை மட்டுமே பொறுப்பு

21. கானன் மற்றும் பார்ட் கொள்கையின்படி, மனவெழுச்சித் தூண்டல்கள் மூளையின் எந்தப் பகுதியைத் தாக்குகின்றன?
அ) செரிபிரம்
ஆ) ஹைப்போ தாலமஸ்
இ) மெடுலா
ஈ) சிறுமூளை

22. சமூகத்தில் பிறருடன் தொடர்பு கொண்டு இணக்கமான முறையில் பழகத் தேவைப்படும் திறன்கள் வளர்ச்சி பெறுதல் எது?
அ) மனவெழுச்சி வளர்ச்சி
ஆ) அறிவு வளர்ச்சி
இ) சமூக வளர்ச்சி
ஈ) ஒழுக்க வளர்ச்சி

23. "தான் வாழும் சமுதாயத்தின் நெறிமுறைகளைக் கற்றுணர்ந்து நடத்தைகள் மூலம் வெளிப்படுத்துதல்" என்பது சமூக வளர்ச்சியின் எந்த நிலை?
அ) சமூகப் பணிகளில் பங்கேற்றல்
ஆ) சமூக உணர்வு பெற்றுத் திகழ்தல்
இ) பொருளாதார சுதந்திரம்
ஈ) தனிமை விரும்புதல்

24. ஹர்லாக்கின் கருத்துப்படி, சமூக வளர்ச்சி என்பது எது?
அ) உடல் எடை அதிகரிப்பு
ஆ) சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்
இ) அறிவுத் திறன் மேம்பாடு
ஈ) மனவெழுச்சி கட்டுப்பாடு

25. சமூக அறநெறிகளை அறிந்து அதன்படி ஒழுகுதல் எது?
அ) சமூக வளர்ச்சி
ஆ) மனவெழுச்சி வளர்ச்சி
இ) ஒழுக்க வளர்ச்சி
ஈ) அறிவு வளர்ச்சி

26. குழந்தை நடக்கக் கற்றல், பேசக் கற்றல் போன்றவை எந்தப் பருவத்தின் வளர்ச்சிப் பணிகள்?
அ) குழவிப் பருவம் (Infancy)
ஆ) பிள்ளைப் பருவம்
இ) குமரப் பருவம்
ஈ) முதிர் பருவம்

27. படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகியவற்றிற்கான அடிப்படைத் திறன்களைப் பெறுதல் எந்தப் பருவத்தின் பணி?
அ) குழவிப் பருவம்
ஆ) பிள்ளைப் பருவம்
இ) குமரப் பருவம்
ஈ) முதுமைப் பருவம்

28. பால்தொடர்பான தனது நிலையினைக் குழப்பமின்றி ஏற்றுக்கொள்ளுதல் எந்தப் பருவத்தின் வளர்ச்சிப் பணி?
அ) குழவிப் பருவம்
ஆ) பிள்ளைப் பருவம்
இ) குமரப் பருவம்
ஈ) முதிர் பருவம்

29. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், இல்லறம் நடத்துதல் எந்தப் பருவத்தின் பணி?
அ) குமரப் பருவம்
ஆ) முதிர் பருவம்
இ) நடு வயது பருவம்
ஈ) முதுமைப் பருவம்

30. திறன் குறைவினைப் பதட்டமின்றி ஏற்றல், ஓய்வு பற்றிய நன்மனப்பான்மை பெறுதல் எந்தப் பருவத்தின் பணி?
அ) நடு வயது பருவம்
ஆ) முதிர் பருவம்
இ) குமரப் பருவம்
ஈ) முதுமைப் பருவம்

31. குழுவிப் பருவம் (பிறப்பு முதல் 3 வயது வரை) எந்தக் கல்வி நிலையுடன் பொருந்தும்?
அ) மழலையர் பள்ளி
ஆ) பெற்றோரைச் சார்ந்து குடும்ப அனுபவங்கள்
இ) தொடக்கப் பள்ளி
ஈ) கல்லூரிக் கல்வி

32. முன்பிள்ளைப் பருவம் (3-5+ வயது) எந்தக் கல்வி நிலையுடன் பொருந்தும்?
அ) கல்லூரி
ஆ) மழலையர் பள்ளி, மாண்டிச்சோரி, கிண்டர் கார்டன்
இ) உயர்நிலைப் பள்ளி
ஈ) முறைசாராக் கல்வி

33. வளர்ச்சி தொடர்ச்சியானது என்ற கோட்பாடு எதைக் குறிக்கிறது?
அ) வளர்ச்சி திடீரென நிகழும்
ஆ) வளர்ச்சி நிற்கக்கூடியது
இ) வளர்ச்சி படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் நிகழும்
ஈ) வளர்ச்சிக்கு வரிசை இல்லை

34. முன்னேற்றம் என்பது பொதுமைத் துலங்கலில் ஆரம்பித்து குறிப்பிட்ட சிறப்புத் துலங்கலில் நிறைவடைகிறது என்றால் அதன் பொருள் என்ன?
அ) பொதுத் திறன்களிலிருந்து சிறப்புத் திறன்களுக்கு முன்னேற்றம்
ஆ) சிறப்பிலிருந்து பொதுமைக்கு
இ) உடலிலிருந்து மனதுக்கு
ஈ) மனதிலிருந்து உடலுக்கு

35. வளர்ச்சி என்பது தலை முதல் கால் நோக்கியும், மையப் பகுதியிலிருந்து விளிம்புப் பகுதியை நோக்கியும் அமையும் - இது எதைக் காட்டுகிறது?
அ) வளர்ச்சியின் திசை
ஆ) முன்னேற்றத்தின் வேகம்
இ) மரபின் தாக்கம்
ஈ) குழநிலையின் முக்கியத்துவம்

36. வளர்ச்சிசார் செயல்கள் (developmental tasks) என்ற சொல்லைப் புகுத்தியவர் யார்?
அ) ஹாவிகர்ஸ்ட்
ஆ) வாட்சன்
இ) வேலிகண்ட்
ஈ) பேஜ்

37. ஒரு பருவத்திற்கான வளர்ச்சிப் பணிகளை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
அ) முதிர்ச்சி நிலை மற்றும் சமுதாயத்தின் பண்பாட்டு அமைப்பின் தன்மை
ஆ) மரபு மட்டும்
இ) குழநிலை மட்டும்
ஈ) வயது மட்டும்

38. பிள்ளைப் பருவத்தில் தன்னைப் பற்றிய உண்மை நிலைப்பட்ட கருத்தைப் பழகுதல் என்பது எதன் பகுதி?
அ) உடல் வளர்ச்சி
ஆ) சமூக வளர்ச்சி
இ) அறிவு வளர்ச்சி
ஈ) தன்முன்னேற்றம்

39. "ஒரு குறிப்பிட்ட வகை முன்னேற்றம், பிறவகை முன்னேற்றங்கள் ஏற்படத் துணை புரிகிறது" - இது முன்னேற்றத்தின் எந்த இயல்பு?
அ) தொடர்ச்சியின்மை
ஆ) ஒருங்கிணைப்பு
இ) வரிசைக்கிரமம்
ஈ) தனியாள் வேற்றுமை

40. முன்னேற்றம் தொடர் நேர்கோடாக அமையாமல் எவ்வாறு அமைகிறது?
அ) கோண வடிவில்
ஆ) வட்ட வடிவில்
இ) கருள் வடிவில்
ஈ) முக்கோண வடிவில்

41. சினை முட்டை, விந்தணுவை விட எத்தனை மடங்கு பெரியது?
அ) 100 மடங்கு
ஆ) 1000 மடங்கு
இ) 8500 மடங்கு
ஈ) 10,000 மடங்கு

42. மனிதனின் ஒவ்வொரு உயிரணுவிலும் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
அ) 23
ஆ) 46
இ) 20,000
ஈ) 42,000

43. கருவுறுதலில், பெண் செல்லின் எந்தக் குரோமோசோம்கள் ஆண் செல்லின் எந்தக் குரோமோசோம்களுடன் இணைகின்றது என்பது எதன் அடிப்படையில் நிகழ்கிறது?
அ) மரபு விதி
ஆ) வாய்ப்புக் கோட்பாடு
இ) நிலையான விதி
ஈ) கட்டாயம்

44. வளர்ச்சி விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு எது?
அ) குழவிப் பருவத்தில் குறைவு, குமரப் பருவத்தில் அதிகரிப்பு
ஆ) எப்போதும் அதிகரிப்பு
இ) எப்போதும் குறைவு
ஈ) வயதுக்கு ஏற்றவாறு மாற்றமில்லை

45. முதிர்ச்சி என்பது எதனுடன் தொடர்புடையது?
அ) உடல் அளவு மட்டும்
ஆ) உயிரியல் மற்றும் செயல்பாட்டு முழுமை
இ) அறிவு மட்டும்
ஈ) சமூகத் தொடர்பு மட்டும்

46. "தான்" என்ற உணர்வைத் தாண்டி "நாம்" என்ற உணர்வோடு இயங்குதல் எதன் பகுதி?
அ) ஒழுக்க வளர்ச்சி
ஆ) மனவெழுச்சி வளர்ச்சி
இ) சமூக வளர்ச்சி
ஈ) உடல் வளர்ச்சி

47. சரி, தவறு என்று பிரித்தறியும் திறனைப் பெறுவது எது?
அ) சமூக உணர்வு
ஆ) ஒழுக்க உணர்வு
இ) மனவெழுச்சி
ஈ) அறிவுத் திறன்

48. குமரப் பருவத்தில் வாழ்க்கைத் தொழில் தேர்வு என்பது எதன் எடுத்துக்காட்டு?
அ) முதிர்ச்சியின் விளைவு
ஆ) பண்பாட்டுச் செல்வாக்கு
இ) தனிப்பட்டோரின் மதிப்புகள், ஆவாக்கள்
ஈ) கட்டாயம்

49. புத்தகம் படிக்கக் கற்றல் என்பது எதன் எடுத்துக்காட்டு?
அ) முதிர்ச்சியின் விளைவு
ஆ) பண்பாட்டுச் செல்வாக்கு
இ) தனிப்பட்ட விருப்பம்
ஈ) மரபு

50. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் காணப்படும் முன்னேற்றம் ஒரே சீராக இருப்பதில்லை - இது எதனைக் காட்டுகிறது?
அ) முன்னேற்றத்தின் சமநிலை
ஆ) முன்னேற்றத்தின் ஏற்றத்தாழ்வு (மாறுபாடு)
இ) முன்னேற்றத்தின் விரைவு
ஈ) முன்னேற்றத்தின் நிறுத்தம்

விடைத் தாள் (Answer Key)

1. அ 2. ஆ 3. இ 4. ஆ 5. ஆ 6. இ 7. ஆ 8. ஆ 9. இ 10. ஈ  11. இ 12. ஆ 13. இ 14. ஆ 15. ஆ 
16. இ 17. இ 18. ஆ 19. ஆ 20. ஆ  21. ஆ 22. இ 23. ஆ 24. ஆ 25. இ 26. அ 27. ஆ 28. இ 29. ஆ
 30. ஈ 31. ஆ 32. ஆ 33. இ 34. அ 35. அ 36. இ 37. அ 38. இ 39. ஆ 40. இ 41. இ 42. ஆ 43. ஆ
 44. அ 45. ஆ 46. இ 47. ஆ 48. இ 49. ஆ 50. ஆ

Next Post: Special TET 2026 | Paper II | Psychology | Unit 3

அறிவு திறன் வளர்ச்சி (COGNITIVE DEVELOPMENT)

Definition of Psychology – Methods of Psychology – Branches of Psychology – Educational Psychology – Definition, Nature and Scope of Educational Psychology: The Learner, Learning Process, Learning Experience, Learning environment, Teacher and teaching – Significance of Educational Psychology to the teacher.

Most expected Questions in Special TET 2026 | Paper II | Psychology | Unit 3


🎯 Why These 50 Questions are Important for TET 2026

These questions are not randomly selected. They are based on:

  • Previous year TET question papers

  • Repeated concepts in TN TRB exams

  • High-weightage topics in Unit 2

  • Common misconceptions cleared with correct answers

Mastering these 50 questions alone can help you score 10–12 marks easily in the Psychology section.

📌 Tips to Remember Psychology Unit 2 for TET 2026

  1. Understand, don't memorize – Focus on the nature and scope of each concept.

  2. Link theorist to theory – Create a small chart of names (Wundt, Watson, Freud, Piaget, etc.) and their contributions.

  3. Practice MCQs daily – At least 10–15 questions per day.

  4. Revise definitions – Especially Educational Psychology definitions by Kolesnikov, Crow, etc.

  5. Use bilingual notes – Tamil + English helps in faster recall.